உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கமே வாழிய... வங்கப்பிரிவினையான அக்டோபர் 16ஆம் நாளைத் துக்கநாளாக அனுசரிக்கும் வகையில், சமைத்த உணவை யாரும் உண்ணக் கூடாதென்றும், வங்காளத்தைப் பிரிக்க முடியாது என்பதைக் காட்டும் வகையில் 'கூட்டுறவு மன்றம்' என்ற கட்டிடம் ஒன்றை கல்கத்தாவில் எழுப்புவது என்றும், அதற்கு ஆனந்த மோகன் போஸ் அடிக்கல்நாட்டுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர்வலங்கள் நடைபெற்றன. அந்நியத்துணிகள் எரிக்கப்பட்டன.11 அக்காலத்தில் வங்காளத்தில் பொங்கி எழுந்த தேசிய உணர்ச்சி இந்தியத் திருநாட்டில் சுதந்திரம் வேண்டி நிற்போர் எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்திழுத்தது. தேசிய உணர்ச்சிமிக்க மாணவர் கூட்டத்தினர் சென்னை கடற்கரையில் திரண்டனர். அந்த பெருங்கூட்டத்தில் பாரதி "வங்கமே வாழிய" என்ற கவிதையை முழங்கினார்.2 அது 1905 செப்டம்பர் 15 சுதேசமித்திரனில் வெளிவந்தது. 1905 ஆம் ஆண்டில் வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து இந்திய நாட்டில் எழுந்த தீவிர தேசீயவாத அரசியலில் முன்னணித்தலைவர்களாக திலகர், அரவிந்தர், விபின்சந்திரபாலர், லாலாலஜபதிராய் போன்றோர் திகழ்ந்தனர். இவர்களில் லோகமான்ய பாலகங்காதர திலகரைப் பாரதி பின்பற்றத் துவங்கினார். தேசபக்தச் செம்மல் வ.உ.சி., திரு.வி.க., சக்கரைச் செட்டியார், வக்கீல் துரைசாமி, டாக்டர் ஜெயராம், பத்திரிகையாளர் சி.எஸ்.ரகுநாதராவ், வணிகர் இராமசேசய்யர் போன்ற முற்போக்காளர்களின் தொடர்பும் பாரதிக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை தீவிரமாக ஒப்படைத்து களத்தில் இறங்கினார் பாரதி. சக்கரவர்த்தினியில் பாரதியார் 1905 ஆகஸ்ட்டில் துவங்கப்பட்டு மாதந்தோறும் வெளிவந்த "சக்கரவர்த்தினி' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய பாரதி, காங்கிரசின் மிதவாத, தீவிரவாத போக்குகளை கவனிக்கும் அரசியலிலும் ஆர்வத்துடன் பணியாற்றினார். 11. சுசோபன் சர்க்கார், வங்காள மறுமலர்ச்சி, 1988, பக் 80-84. 12. கி. முத்துக்கிருஷ்ணன், மகாகவி பாரதியார் வாழ்க்கைச்சித்திரம், 1986, பக் 45. 10