10.11.1904 வரை தமிழாசிரியராகப் பணியாற்றிய பாரதி, பின்னர் அங்கிருந்தும் விலகினார். சுதேசமித்திரனில் துணையாசிரியர் அப்பொழுது சென்னையில் ஸ்ரீமான் ஜி. சுப்பிரமணிய அய்யர் சுதேசமித்திரன் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். பாரதியார் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்த பாரதியின் மாமா லெட்சுமண அய்யர் என்பார் ஸ்ரீமான் ஜி. சுப்பிரமணிய ஐயரிடம் பாரதியாருக்கு ஒரு வேலை அளிக்குமாறு கேட்கவே, அய்யரும் ஒப்புக்கொண்டார். அது முதல் பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உதவியாசிரியானார். 10 ஆங்கிலேயர்களால் தொழில் முயற்சியில் அழிந்த தனது தந்தையின் நிலையை அடிமனத்தில் நினைத்துக் கொண்டிருந்த பாரதி, ஆங்கிலேயரை எதிர்த்திட வாய்ப்புக்கள் நிறைந்த துறையான பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றது எரிந்து கொண்டிருக்கிற நெருப்பினில் எண்ணை வார்த்தது'போல் அமைந்து, பாரதியின் அரசியல் பிரவேசத்தை துரிதப்படுத்தியது. வங்கப்பிரிவினையும் சுதேசி இயக்கமும் வங்காளத்தில் வளர்ந்து வந்த தேசிய உணர்வு அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களிடையில் அச்சத்தை உண்டாக்கியது. அந்த இயக்கத்தை முறியடிப்பதற்காகத் திட்டம் ஒன்றைத் தீட்டிய அவர்கள் வங்காளத்தை இரண்டு மாநிலங்களாகப் பிரிப்பது என்று முடிவு செய்தனர். முஸ்லிம்கள் வங்காளத்தின் கிழக்கு மாவட்டங்களில் பெரும் பான்மை மக்களாக இருந்தனர். பிரிவினையினால் தோற்றுவிக்கப் படும். கிழக்கு மாநிலத்தில் தாம் ஆதிக்கம் செலுத்தலாம் என்று எண்ணி முஸ்லிம்கள் பிரிவினையை ஆதரிப்பார்கள் என்று ஆட்சியாளர்கள் கருதினர். இந்தத் திட்டத்தினால் இந்துக்களும் இரண்டாகப் பிளவுண்டு அடங்கி ஒடுங்கி விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு நிர்வாக நடவடிக்கை என்ற முறையில் வங்காளப்பிரிவினைத் திட்டம் 1905 ஜூலை 20ம் தேதி அறிவிக்கப்பட்டது; அக்டோபர் 16ஆம் தேதியன்று அத்திட்டம் அமுலாகும் என்றும் அந்த அறிவிப்பு கூறியது. பிரிட்டிஷாரின் சவாலுக்கு மக்கள் ஆத்திரத்துடன் எதிர்ப்பு தெரிவித்தனர். 10. சக்தி தாஸன் சுப்பிரமணியன், பாரதி லீலை, 1938, பக் 53, 54. 9
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/10
Appearance