அந்தக்கவிதையில் "தமிழ் மொழியை அடிமை கொண்டு ஆட்சி செலுத்தி வந்த ஆங்கிலத்தை புன்மொழி என்றும், நாட்டை ஆண்ட ஆங்கிலேயரைப் புலைஞர் என்றும், இழித்துரைக்கிறார் பாரதி. ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட குட்டி சமஸ்தானாதிபதியான எட்டயபுரம் மன்னரிடம் உதவி கோரி அவரது சந்நிதியில் பாடுகின்ற பாடலிலேயே ஆங்கிலேயரைப் புலைஞர் என்று பாரதி கூறத் துணிந்திருக்கிறான் என்றால் அவன் மனத்தின் அடியாழத்தில் ஆங்கிலேயர் மீது எத்தனை வெறுப்பு குடி கொண்டிருந்தது என்பதை நாம் இதன் மூலம் ஊகித்துக் கொள்ளலாம்.8 காசில்லாக் கவிஞன், காசியில் அடைக்கலம் 1887இல் தாயை இழந்து, 1898இல் தந்தையை இழந்து, தன்னை ஆதரிப்போர் இன்றி அவதிக்குள்ளாகி, கடையம் செல்லப்பாவின் மகள் செல்லம்மாளை மணந்து கஷ்ட வாழ்க்கையை நடத்தி வந்த பாரதிக்கு கதியாக அமைந்தது காசி நகரம்; காரணம் பாரதியின் அத்தை குப்பம்மாளும், அவரது கணவர் கிருஷ்ணசிவனும் காசியில் செல்வாக்கோடு இருந்தனர். அங்கே அவர்களிடம் அடைக்கலம் புகுந்த பாரதி ஹனுமந்த கட்டத்தில் சிவமடத்தில் தங்கினார். காசிக்குச் சென்றதும் பாரதியார் அத்தையார் அவரை கலாசாலையில் சேர்த்தார். இந்தி, சமஸ்கிருதம் முதலியவைகளை வெகு சீக்கிரத்தில் கற்றுப் பிரவேசப் பரிட்சையில் முதலாவதாகவும் தேறினார். 9 அங்கிருந்து கொண்டே கிறிஸ்தவ மிஷினரிக் கல்லூரியிலும் பயின்றார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார். 1.1.1903இல் இந்திய வைசிராய் கர்சான் நடத்திய தர்பாரில் கலந்து கொள்ள வந்த எட்டயபுரம் மன்னர் திரும்பும் வழியில் காசிக்குச் செல்கிறார். காசியில் பாரதியைச் சந்தித்த எட்டயபுரம் மன்னர் பாரதியை திரும்பவும் எட்டயபுரத்திற்கே அழைத்து வந்தார். தமிழாசிரியர் பாரதி எட்டயபுரம் ஜமீனில் செய்தி நிருபராகப் பணியாற்றிய பாரதி, ஜமீன்தாரோடு மனவேற்றுமை கொண்டு எட்டயபுரத்தை விட்டு வெளியேறினார். மதுரை சேதுபதி உயர்தரப்பள்ளியில் 1.8.1904 முதல் 8.ரகுநாதன்,பாரதி காலமும் கருத்தும், பக். 47 9. செல்லம்மா பாரதி, பாரதியார் சரித்திரம், 1946, பக். 24 8
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/9
Appearance