உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலகண்ட பிரம்மச்சாரி, பி.பி.சுப்பையா, நாகசாமி, எம். சீனிவாசன், ஜி.ஆர். சீனிவாசன், எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர், நடேச அய்யர், வெ. சாமிநாத சர்மா, ராமானுஜுலு நாயுடு, வெ.ப. சுப்பிரமணிய முதலியார், நாமக்கல் கவிஞர், ச.து.சு.யோகி, எட்டயபுரம் ஜமீன்தார், விருதை சிவஞான யோகி, சக்கரவர்த்தினி பி. வைத்தியநாத ஐயர், சங்கீதம் சுப்பராம தீட்சதர், ஈரோடு தங்கப்பெருமாள் பிள்ளை, அரவிந்தர் ஆசிரமம் அமுதன், வையாபுரிப் பிள்ளை, பி.ஸ்ரீ. ஆசாரியா, டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.பி. சுப்பிரமணிய ஐயர், அ. மாதவையா, ராய. சொக்கலிங்கம், லட்சுமண அய்யர், சங்கர ஐயர் கிருஷ்ணசாமி ஐயர், விசுவநாதபாரதி, லட்சுமிநரசு, கனகலிங்கம், ஜெயராமநாயுடு, ராமஷேசய்யர், நஞ்சுண்டராவ் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார், ஈசுவரஐயர், பால், சுத்தானந்த பாரதி, சிங்காரவேலு, வீரேசலிங்கம் பந்தலு, விபினசந்திரபால், காவ்யகண்ட கணபதி சாஸ்திரிகள், சூரத் சங்கரநாராயணஐயர், சூரத் ராமசாமி அய்யர், சூரத் வெங்கட்ரமணராவ், சூரத் கிருஷ்ணமாச்சாரியார் சபர்தே, அஜித்சிங், யங் இந்தியா லாலாலஜபதிராய், மகாத்மா காந்தியடிகள், கனகசபைப்பிள்ளை, ஜேம்ஸ், கசின்ஸ், சட்டசபை துளசிராம், பாரதியின் குடும்ப நண்பர்கள் பண்டிட் எஸ்.நாராயண அய்யங்கார், ஆறுமுகம் செட்டியார், கருணாநிதி கிருஷ்ணசாமிப்பிள்ளை, சைகோன் சின்னையா, கிருஷ்ணசாமி செட்டியார், விளக்கெண்ணெய் செட்டியார் என்ற மாணிக்கம் செட்டியார், டி.விஜய ராகவாச்சாரி, சோம தேவசர்மா, பொன்னு முருகேசம்பிள்ளை, என். சுப்பிரமணிய ஐயர், பாரதியைப் போற்றிய உறவினர்கள் அப்பாத்துரை (மச்சினர்) அரிகரசர்மா கிருஷ்ணசிவன், குப்பம்மாள், பாகீரதி, வள்ளியம்மாள், சி. விசுவநாதன், மனைவி செல்லம்மா, மகள் தங்கம்மா, மகள் சகுந்தலா குருசாமி, ஸ்தாணு சங்கரன், சிற்றன்னை மகள் லட்சுமி பாரதியைப் போற்றிய மாதர்கள் பாக்கிய லட்சுமி, யதுகிரி, அன்னிபெசன்ட் அசலாம்பிகை, மங்களம்மாள், பாரதிக்குப் பண உதவி செய்த எம்.எஸ்.துரைசாமி ஐயர், மண்டயம் திருமலாச்சாரி, மண்டயம் சீனிவாச்சாரி, சுந்தரேச ஐயர், சீனிவாச வரதன், வெல்லச்செட்டியார், வயி.சு.சண்முகம் போன்ற எண்ணற்ற பெருமக்களின் வாழ்வோடு தொடர்பு கொண்டிருந்த பாரதி காங்கிரஸ் வரலாற்றிலும் தனக்கென தனியான இடத்தைப் பெற்றிருக்கிறார். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை ஆண்டுக் கணக்கிலே சந்தித்து உடல் நலிவுற்ற பாரதி, பொருளாதாரத்திலும் நசிந்து, உள்ளமும் கலங்கிய நிலையில் கடலூர் சிறையிலிருந்து, ஆட்சியாளர்களின் நிபந்தனைகளை ஏற்று வெளியே வந்தார் என்றாலும் அவரின் தேச பக்தியை எவரும் குறைத்து மதிப்பிடல் முடியாது. அதுமட்டுமா? 30