உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழுந்தார்? இல்லை! திறமையானவர்களை கைதூக்கிவிட மறுத்த இந்த சமுதாயத்தில் அறிவு அல்லவா கீழே தள்ளப்பட்டது. 27.8.1920ல் தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பாரதியை அழைத்தனர். அதில் அவர்கலந்து கொள்ளவில்லை. அதன்பின்னர் 1920 நவம்பரில் திரும்பவும் பாரதி சென்னை சென்றார். சுதேசமித்திரன் பத்திரிகையில் துணையாசிரியர் ஆனார். காந்தியடிகளும் பாரதியும் சென்னையில் காந்தியை சந்தித்த பாரதியார் 'மிஸ்டர் காந்தி இன்று மாலை ஐந்தரை மணிக்கு திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப்போகிறேன். அக்கூட்டத்திற்கு தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?' என்று கேட்டார். அன்று வேறு அலுவல் இருந்ததால் காந்தி தலைமையேற்க இயலாது என்றார். உடனே பாரதி 'மிஸ்டர் காந்தி நான் போய் வருகிறேன், தாங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். 39 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. ய சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணியஐயர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை, வீரத்துறவி சுப்பிரமணிய சிவா, மகான் அரவிந்தர், புரட்சி வீரர் வ.வே. சுப்பிரமணிய ஐயர், பாரதிக்கு குருவாக விளங்கிய பாலகங்காதர திலகர், நிவேதிதாதேவி, குள்ளச்சாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணச்சாமி, பாரதியை பாரறியச்செய்த பரலி. சு.நெல்லையப்பர், வா. ராமசாமி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பாரதியின் மெய்க்காப்பாளர் குவளை கிருஷ்ணமாச்சாரியார், பாரதியின் இலக்கிய நண்பர்கள் விவேகபாநு மு.ரா. கந்தசாமிக்கவிராயர், மதுரை கோபாலகிருஷ்ண அய்யர், மகேசகுமாரசர்மா, சோமசுந்தரபாரதியார், வ.வேதநாயகம் பிள்ளை, மு. இராகவஐயங்கார், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், பாரதியின் அரசியல் துறை நண்பர்கள் ராஜாஜி, சத்தியமூர்த்தி,அரங்கசாமி ஐயர், ஜி.ஏ. நடேசன், வி. கிருஷ்ணசாமி அய்யர், சுரேந்திரநாத் ஆர்யா, வி.சர்க்கரை செட்டியார், நீதிபதி மணி அய்யர், திரு.வி.கல்யாணசுந்தரனார், பாரதியின் பத்திரிகை துறை நண்பர்கள் 39.அ. இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, 1969, பக் 248, 249. 29