உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரித்திரத்தில் மறைக்கப்பட்ட தீரர்களின் வரலாறு குறித்த விஷயங்களை வெளியுலகம் அறியச் செய்திட எவ்வளவு முயற்சிகள் இனியும் மேற்கொள்ள வேண்டியதிருக்கிறதென்பதனை அப்போது எண்ணிக் கொண்டேன். (அது குறித்து ஆய்வும் தொடர்ந்து செய்தும் வருகிறேன்.) ரங்கசாமி அய்யங்காரின் முயற்சியும் விடுதலையும் கடலூர் சிறைக்கு சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார் வந்தார்; பாரதியைக் கண்டு பேசினார். பின்னர் அவர் அன்னிபெசண்ட்டு, சர்.சி.பி.இராமசாமி ஐயர், நீதிபதி மணி அய்யர் ஆகியோருடன் பாரதியின் விடுதலைக்காக ஆளுநரைச் சந்தித்தார்.

  • நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில்

எதிலாவது ஒன்றில் மட்டுமே வாழ்க்கை நடத்த வேண்டும். ✰✰ பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன்கூட்டியே குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அது தணிக்கை செய்த பின்னரே அவற்றை வெளியிட வேண்டும்.

    • அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பாரதி நீங்கிவிட

வேண்டும். என்ற நிபந்தனைகளை அரசு விதித்தது, அதனை பாரதி ஏற்றுக்கொண்டதால் மாவட்ட நீதிபதி முன் 14.12.1918இல் வரவழைக்கப் பட்டு பாரதி விடுதலை செய்யப்பட்டார். இதனை 16.12.1918 'சுதேசமித்திரனும்' 17.12.1918 ' தேசபக்தனும்' செய்தியாக வெளியிட்டது. விடுதலையானபின் நெல்லை மாவட்டம்கடையத்திற்கு வந்து பாரதி வாழ்ந்து வந்தார். எட்டயபுரம் ராஜராஜேந்ர மகாராஜாஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்பப்பூபதி மன்னருக்கு சீட்டுக்கவிகள் எழுதினார். அவரது வறுமை நிலையின் உச்சத்தை அந்தக் கடிதங்கள் இன்னும் உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. உதவிகேட்டு அனுப்பிய அந்தச் சீட்டுக்கவிகள் பலனளிக்கவில்லை. பாரதியின் முயற்சிகள் எதுவும் சரிப்பட்டு வரவில்லை; வறுமை விரட்டியது. கடையத்தில் கடும் பசியில் வாடினார்; கோவிலில் வரிசையில் நின்று உண்டக்கட்டியை வாங்கித் தின்றார்; அப்போதும் பசி அடங்கவில்லை; திரும்பவும் வரிசைக்கு சென்றார். "என்ன திரும்பவும் வருகிறாயோ?” என்று பாரதியைப் பிடித்து கீழே தள்ளினர். பாரதியா கீழே 28