உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தே என்பது தெய்வத்தைக் குறிக்கும் சொல். வாரம் என்பது இசைப்பாட்டு வகையில் ஒன்று. அது சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடைய தென்றும், இசைக்குரிய உருப்படி களில் ஒன்றென்றும், தெய்வத்தைப் பாடும் பாடலென்றும், தாள அமைப்போடு கூடியதென்றும் சிலப்பதிகார உரைகளால் தெரிய வருகின்றது.* கடவுளை வாழ்த்தும் பாடலுக்குத் தேவபாணி என்ற பெயர் பழங்காலத்தில் வழங்கிவந்தது. அதுபோலக் கட வுளைத் துதிக்கும் இசைப்பாடலுக்குத் தேவாரம் என்ற பெயர் வந்தது. தேவாரம் என்ற பெயர் பழங்காலத்தில் வழக்கில் இருந்த தாகத் தெரியவில்லை. சிலாசாசனங்களில் திருப்பதியும் என்று தேவாரப் பாடல்களைக் குறித்திருக்கிறார்கள். மச்சினார்க்கினியர் திருப்பாட்டு என்று சொல்வர். ஔவையார், பாடிய, "தேவர் குறளும் திருநான் மறைமுடிவும், மூவர் தமிழும்" என்னும் பாட்டில் மூவர் தமிழ் என்று கூறுகிறார். கி.பி.1060- ஆம் ஆண்டு எழுந்து கல்வெட்டு ஒன்றில் தேவாரத்துக்குத் திரும் பதியம் விண்ணப்பம் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக்கரையன்' என்ற தொடர் வருகிறது. கி.பி. 1245-ஆம் ஆண்டில் எழுந்த மற்றொரு கல்வெட்டில் சீகாழியில் திருமுறைத் தேவாரச் செல் வன் திருமடம்' என்ற ஒருமடம் இருந்த செய்தி வருகிறது. 4 இக்காலத்தில் அன்பர்கள் தேவாரத்தைத் திருநெறித் தமிழ் என்று வழங்குவர். திருஞான சம்பந்தர் பாடிய முதற் பதிகத் தின் இறுதிப் பாசுரத்தில், திருநெறிய தமிழ் வல்லவர்" என்று கூறுவதை அடியொற்றி இவ் வழக்கு அமைந்தது.

  • 'வாரப் பாடல் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடைத்தாத

லாவ்) (சிலப்பதிகாரம், 3: 87, அரும்பதவுரை); 'வாரம்... பாட தெய்வப் பாடல் பாட' (க்ஷை.3: 186,அரும்பத.);"வாங்கிய வாரத்து - இப்படி நிகழ்ந்த உருக்களில் (ஷை. 3: 50.அடியார்க்கு நல்லார். உரை): 'வாரம் இரண் டாவன ஓரொற்று வாரம், ஈரொற்றுலாா மென்னும் செய்யுள். அவை தாளத்து ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் பெற்று வரும்' (சிலப்.3: 135-6, அடியார்க்கு.) இந்தச் சாசனச் செய்திகள் திரு ம.பாலசுப்பிரமணிய முதலியா ரவர்களால் ஒரு சொற்பொழிவினிடையே சொல்லப் பெற்றன: (மெய் கண்டான் சித்தாந்த மகரதாடு - திருமுறைத் திருநாள் நிகழ்ச்சிகள், 228, 229.)