உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii . திருஞானசம்பந்த சுவாமிகள் பாடிய பதிகங்கள் பதினாயிரம் என்றும், அவற்றிற் பல சிதலால் அழிந்தன என்றும் கூறுவர். இப்போது உள்ளவை 383 பதிகங்கள். அவற்றையே மூன்று திருமுறைகளாக நம்பியாண்டார் நம்பிகள் வகுத்தார். இக்காலத் தில் திருவிடைவாய் என்னும் தலத்திலே கிடைத்த கல்வெட்டில் அத்தலத்துக் குரிய திருப்பதிகம் ஒன்று இருந்தது. அது திரு முறைகளில் சேராதது.136 பதிகங்களை முதல் திருமுறையாக வும், 122 பதிகங்களை இரண்டாவது திருமுறையாகவும், 120 பதிகங்களை மூன்றாவது திருமுறையாகவும் வகுத்திருக்கிறார்கள். இவை பண்முறையாக வகுக்கப் பெற்றவை. முதல் திருமுறை யில் நட்டபாடை, தக்கராகம், பழந்தக்கராகம், தக்கேசி, குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, யாழ்மூரி என்ற பண் களில் அமைந்த திருப்பதிகங்கள் இருக்கின்றன. இந்தப் பதிகங் களின் பண்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய மரபிலே வந்த ஒரு பெண்மணியின் வாயிலாக அறிந்து நம்பியாண்டார் நம்மி அமைத்தனர்.

இயற்கையின் எழிலைக் கவிதையிலே ஓவியமாகக் காட்டி, மனித உள்ளத்திலே தோன்றும் மிக நுட்பமான உணர்ச்சியாகிய காதலை அணு அணுவாக ஆராய்ந்து, அதனால் விளையும் உள்ளத் துடிப்புகளை நன்றாகத் தெரிந்து பாடி, வீரத்தையும் கொடையை யும் பாராட்டிச் சங்ககாலப் புலவர்கள் தமிழை வளர்த்தனர். அக் காலத்தில் உள்ளதை உள்ளபடியே சொல்லும் நெறி இருந்தது. சங்ககாலத்துத் தமிழே தனிச்சுவையை உடையதாக வளர்ந்தது. காதலையும் வீரத்தையும் பாராட்டிவந்த புலவர்கள் அவ் விரண்டையுமே தலைமையாக வைத்து மற்ற உணர்ச்சிகளைப் புறக்கணிக்கத் தொடங்கினர். மனித வாழ்வுக்கு இன்றியமையாத தாகிய கடவுள் உணர்ச்சி பண்டைத் தமிழரிடத்திலே ஆழ வேருன்றி இருந்தாலும் அது கப்பும் கிளையுமாய்ப் பரவவில்லை. இந்த நிலையில் வேற்றுச் சமயத்தினர் தம்முடைய நெறிகளைத் தமிழ் நாட்டில் புகவிட்டனர்; பௌத்தமும் சமணமும் தமிழ்நாட் டிலே புகுந்தன. இயற்கையாக இந்நரட்டில் வேரூன்றாத அச்சம யங்களுக்கு உறுதியான பற்றுக்கோடு கிடைக்கவில்லை. உலகிய . .