உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் கவர் கள்வன். தோடுஉடைய செவியன் விடைஏறிஓர் தூவெண் மதிசூடிக் காடு உடைய சுடலைப் பொடிபூசிஎன் உள்ளம் கவர்கள்வன். கிறார்.

ள முதலிலே "தோடுடைய செவியன்" என்று தொடங்கு. இறைவனுடைய திருவருளாலே ஞானம் பெற் றார் சம்பந்தப் பெருமான். அதற்கு உரிய கருவியாக இருந்தது உமாதேவியார் கிண்ணத்திற் கறந்து ஊட்டிய பால். எனவே, உமாதேவியாரே ஞானத்தை வழங்கியவ ரென்று சொல்லாம். 'யார் பால் கொடுத்தார்?" என்று கேட்ட வினாவுக்கு, "இறைவன்" என்று சொல்வது முறையாகுமா? உமாதேவியாரல்லவா பால் கொடுத்தார்? ஆதலின் அவரைத்தான் சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் அம்பிகை வேறு, இறைவன் வேறு அல்ல. சிவ மும் சக்தியும் ஒருவரே. சிவபிரானுடைய அருளே சக்தி. ஆதலின் அவர்களைத் தனித் தனியே பிரி த்திச் சொல்வது உயர்வன்று. என்றாலும் அவர்கள் வெவ்வேறு உருவுடையவர்களாகவும் தோற்றுவதனால் வேறு வேறாகப் புகழ்வதும் உண்டு. வேறு வேறாகத் தோற்றினாலும் ஒரு வரே என்பதை இறைவனுடைய அர்த்தநாரீசுவரத் திருக் கோலம் நமக்கு உணர்த்துகிறது. இடப்பாகம் முழுவ தும் அம்பிகையின் உருவாகவும், வலப்பாகம் முற்றும் இறைவனது உருவாகவும் அமைந்தது மாதிருக்கும் பாதிய னுடைய கோலம். அக் கோலத்தில் சிவமும் சக்தியும் வேறு வேறாகத் தோற்றினாலும் இருவராக இருக்கவில்லை. ஒருவராகவே இருந்தாலும் வேறு வேறு பகுதிகளாக இருக்கின்றனர். சம்பந்தருக்குப் பால் கொடுத்த உமா