32 உள்ளம் கவர் கள்வன் தைச் சுட்டிக் காட்ட முடியாது. இங்கிலாந்து நமக்கு மேற்கே இருக்கிறது; ஆனால் அது அமெரிக்காவுக்குக் கிழக்கே இருக்கிறது. கடைய கிழக்காகவே நிற்கும் இடம் தனக்கு அப்பால் இடம் இல்லாத இடந்தான். அதுவே கிழக்கின் எல்லை; சிக் கிழக்கு. அந்த இடமாக இருப்பவன் இறைவன். அவன்தான் சுத்தமான கிழக்கு என்று சொல்வதற்கு உரியவன். அதுபோலவே மற்றத் திசைகளாகவும் அவன் இருக்கிறான். இதனைக் கருதியே சம்பந்தர், "எட்டுத் திசை தானாய்" என்றார். உ இப்படி ஒன்று முதல் எட்டு வரைக்கும் எண்ணின் பொருள்களெல்லாம் தானாகி, பிரபஞ்சத்தோடு அபேத நிலையில் இறைவன் இருப்பதைப் புலப்படுத்தினார் ஆளு டைய பிள்ளையார். பிறகு சுருக்கமாக மற்ற இரண்டு களையும் தெரிவிக்கிறார். இவ்வளவாகவும் நின்றவன் இவ றோடு சாராமல் வேறாகவும் இருக்கிறான். தத்துவாதீதனாக நிற்கும் நிலை அது. அதையே "வேறாய்" என்றார். அடுத்தபடி, சொல்லும் பொருளும் போலப் பேதமும் அபேதமும் ஒருங்கே அமைந்த பேதா பேத நிலையை "உடன் ஆனான்” என்று அருளிச் செய்தார். இறைவன் எல்லாப் பொருளுமாய் நிற்கிறான், எல்லா வற்றினும் வேறாகி நிற்கிறான், எல்லாப் பொருளினூடும் பிரிவின்றி நிற்கிறான் என்று இப்பாட்டினால் சொன்னார். . அப்படி இருக்கின்ற பெருமான் எழுந்தருளியிருக்கும் தலம் திருவீழி மிழலை. இது சோழ நாட்டில் உள்ள திருப்பதி. வீழி என்பது ஒருவகைச் செடி. அதனைத் தல விருட்சமாகப் பெற்றமையால் இதற்குத் திருவீழி
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/41
Appearance