88 உள்ளம் கவர் கள்வன் . வகை மரங்களும் அடர்ந்த சோலைகள் அவ்வூரில் உண்டு. மிகவும் வளமாக அந்த மரங்கள் வளர்ந்திருக்கின்றன. வானத்தை நோக்கி எழுந்த சோலைகள் உள்ளன. வளப்பம் மிக்க சோலையில் மரங்கள் நன்றாக வளர்ந்து மலர்கின்றன. மலர்கள் தேனிருக்கும் கிண்ணங்கள் அல்லவா? தேன் மலர்களில் தேங்கி நிற்கிறது. தேன் நிரம்பிய சோலைகள் இருக்கையில் வண்டுகளுக்குச் சொல்லியா அனுப்பவேண் டும்? தேன் எங்கே இருக்கிறதென்று ஆராய்வதே தொழி லாக உடைய வண்டுகள் எங்கெங்கோ அலைந்து இங்குள்ள சோலைகளை வந்து அடைகின்றன. கள் (தேன்) நின்ற சோலை அல்லவா? இனி எங்கும் போக வேண்டிய அவசியமே இல்லை. சுகமாக அந்தத் தேனை உண்டு களிக் கின்றன. வேறு இடங்களுக்குச் செல்லும் வேலை இல்லாமையால் அவை அமைதியாகச் சோலையிலே தங்கு கின்றன. இனிய தேனை உண்டு அமைதியுற்ற அவ் வண்டு கள் பெற்ற இன்பம் மிகப் பெரிது. அந்த நிலையில் அவை முரலத் தொடங்குகின்றன. அந்த ரீங்காரத்தைக் கேட் டால் காது குளிர்கின்றது. இனிய பண்களை அல்லவா அவை பாடுகின்றன? மகிழ்ந்தவன் ஊர்ஆம், கள் நின்றெழு சோலையில் வண்டு பண் நின்றொலி செய்பனை யூரே. எம்பெருமான் எழுந்தருளி யிருக்கும் தலத்தில், பல இடங்களுக்குச் சென்று திரிந்த வண்டுகள் அவ்வாறு திரியாமல் அமைதி பெற்று இன்னொலி செய்கின்றன. அவனுடைய அன்பர்களின் மனத்தை அந்த வண்டுகள் நினைப்பூட்டுகின்றன. பலவாறு எண்ணங்களைச் சிதறவிடா
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/47
Appearance