42 உள்ளம் கவர் கள்வன் வந்ததன்று; வேதம் ஒலிக்கும் தன்மையால் வந்தது. இன்னமுது உண்ணிய - இனிய உணவுபோல உண்ட. அமுது- அமுதம் என்றும் சொல்லலாம். உண்ணிய: உண் என்பதன் அடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம்; எண், நண், பண் என்பவற்றிலிருந்து எண்ணிய, நண்ணிய, பண்ணிய எனப் பெயரெச்சங்கள் வந்தது போல வந்தது இது. இச்சொல் தமிழ் விரகர் தாமே படைத்துக் கொண்டது. இவ்வாறு இவ்வருட்பெருஞ் செல்வர் புதியனவாக அமைத்துக் கொண்ட சொற்கள் பலவற்றைத் தேவாரத்தில் காணலாம்.] இப்படி அமரர்கள்மேல் வைத்த கருணையால் விடத்தை உண்ட ஈசர் திருக்கற்குடி என்னும் தலத்தில் எழுந்தருளி யிருக்கிறார். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உய்யக் கொண்டான் என்ற பெயரோடு உள்ள ஊரே க குடி. இங்கே சிறு குன்றின்மேல் ஆவயம் இருக்கிறது R
கற் இயற்கைவளம் பாடும் திருஞானசம்பந்தப் பிரானுக்கு இது மாமலையாகத் தோன்றியது மலையும் மலையைச் சார்ந்த. இடங்களும் குறிஞ்சி நிலமாகும். இத்தலத்தில் குறிஞ்சி நிலத்தில் நிகழும் அழகிய நிகழ்ச்சிகள் நடப்பதாகப் பாடுகிறார். களிறும் பிடியுமாகிய இரண்டு யானைகள் மலைச்சாரற் காட்டினூடே செல்லுகின்றன. பிடிக்குச் சற்றே நடை தளர்கிறது. அதற்குப் பசி உண்டாயிருக்கிறது என்ப தைக் குறிப்பால் உணர்ந்து களிறு அதன் பசியைத் தீர்க்க எண்ணுகிறது. அது களிற்றினிடம் மிக்க அன்புடைய பிடி. அல்லவா? எப்போதும் அதன் மருங்கிலே நிற்கும் பிடி அது. அருகே மூங்கிற் காடு. மூங்கில் முளை யானைக்கு மிக வும் விருப்பமான உணவு. ஆண் யானை வாழ்வேலியாக