வீடம் உண்ட ஈசர் னிடம் ஒரு வார்த்தை சொன்னீர்களா?" என்று கேட்க் வில்லை. "இதுவரையில் என்னை நினைக்காமல் செருக்குற்ற உங்கள் வேண்டுகோளைக் கேட்கமாட்டேன்" என்று மறுக்கவில்லை. "இப்பொழுதேனும் இவர்கள் வந்தார் களே!" என்ற அருள் நினைவுதான் அப்பெருமானுக்கு உண் டாயிற்று. அவர்கள் படும் அல்லலை அவன் கண்டு இரங்கினான். " . ண் அந்த நஞ்சினைக் திருக்கரத்தில் வாங்கினான் சிவபெரு மான். அதனை அமுதம்போல உண்டான். உண்ணவில்லை; விழுங்கினான். எப்போதும் மறையை ஓதும் பெருமையை உடைய திருக்கழுத்தில் தங்கும் படியாக வைத்தருளினான். யாரும் உண்ணமாட்டாமல் அஞ்சிய நஞ்சை அவன் யாரும் காணத் தன் திருக்கழுத்தில் வைத்தான். இறைவனுடைய கருணைக்கும் பேராற்றலுக்கும் அடையாளமாக அந்த விடம் அவனுடைய இருங் களத்தில் (பெரிய கழுத்தில்) ர்கின்றது.. ஒருங்கு, "அளி நீ இறை வா" என்று உம்பர்கள் ஓலம் இடக்கண்டு இருங்களம் ஆர விடத்தை இன்னமுது உண்ணிய ஈசர் (தேவர்கள், "இறைவனே, இந்த நஞ்சினால் யாங்கள் இறவா வண்ணம் நீ காப்பாற்றுவாயாக" என்று ஒன்றுபட்டு வந்து ஓல மிடக் கண்டு, அவர்களுக்கு இரங்கி, தம்முடைய பெருமையை யுடைய திருக்கழுத்தில் தங்கும்படியாக ஆலகால விடத்தை இனிய அமுதாக உண்ட ஈசர் - கற்குடி மலையில் உள்ளார் என்று சொல்ல வருகிறார். 'உம்பர்கள் ஒருங்கு ஒலமிட என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும். அளி - காப்பாற்று. இறைவன் - எங்கும் நிறைந் திருப்பவன்.இரும் களம் - பெரிய கழுத்து, பெருமை, அளவினால் -
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/50
Appearance