உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடம் ண்ட ஈசர் ஒருகால் அமார்கள் அமுது கடைய எண்ணினர். பாற்கடலில் மந்தரத்தை மத்தாக வைத்து வாசுகியைக் கயிறாகக் கொண்டு கடைந்தார்கள். "இதில் எழும் அமு தத்தை உண்டால் என்றும் சாவாமல் இருக்கலாம்? என் பது தேவர்களின் எண்ணம். இறைவனுடைய அருளைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்ற நினைவு அவர் களுக்கு இல்லை. பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது ஆலகால விடம் எழுந்தது. அதன் வேகம் யாராலும் தாங்க முடியவில்லை. அதன் காற்றுப் பட்டாலே அமரர்கள் யாவரும் இறந்துபடுவார்கள் என்று தோன்றியது. அப் போதுதான் அவர்களுக்கு இறைவனுடைய நினை எழுந் தது. எல்லாம் நாமே சாதித்துக் கொள்ளலாம்' என்று எண்ணிய அவர்களுடைய செருக்கே ஆலமாக வந்ததோ! இப்போது செருக்கு அழிந்து தேவரெல்லாம் ஒருங்கே திரண்டனர். யாவரும் இறைவனிடம் ஓடிச் சென்று, இறைவா! நீ இன்று எங்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த நஞ்சினால் நாங்கள் உயிரை இழந்து விடுவோம்போல் இருக்கிறதே!" என்று ஓலம் இட்டார்கள். துன்பம் வந்தால்தான் இறைவனை நினைக்கும் எண் ணம் உண்டாகும். இன்பம் உண்டாகும்போது, 'எல்லாம் நம்மால் உண்டானது என்ற அகந்தை நினைவுதான் இருக் கும். ஆலகால விடத்துக்கு அஞ்சித் தம் அகந்தை ஒழிந்து அமரர்கள் ஓலமிட்ட பொழுது பரம கருணாநிதி யாகிய சிவபெருமான், "அமுதத்தைக் கடைவதாக என்