48 " உள்ளம் கவர் கள்வன் . டும்; காம வினை அகற்ற வேண்டும். இப்படி மூன்று கருவிகளிலும் தூய்மையுடையவனாக இருந்து, நல்ல முறை யில் உன் திருநாமத்தைப் பல காலும் சொன்னால் இன்ப வளம் கொழிக்கும். உள்ளம் மாசுபட, உறை மாசுபட உடல் மாசுபட எத்தனை தரம் உன் பெயரைச் சொன்னா லும் அதனால் பயன் இல்லை. சர்க்கரை என்று எழுதின காகிதம் இனிக்கிறது இல்லை. தகுதி யில்லாதவர்கள் உன் திருநாமத்தைச் சொல்வதே தவறு. சொன்னாலும் பயன் இல்லை. அவர்கள் கரடியாய்க் கத்தி, "நான் எத்தனையோ முறை நாமம் நவின்றேன்; அவன் புகழை ஏத்தினேன்; எனக்கு ஒரு பயனும் கிடைக்கவில்லை" என்று சொல்லி ஏசுகிறார்கள். அந்தோ பாவம்! உன் நாமத்துக்குக் குறை உண்டா? அவர்களிடமல்லவா குறை இருக்கிறது? அலி களுக்கு இன்பம் ஏது? தூயர் அல்லாதார் நின் திரு நாமத்தை நவில்வதனால் முழு இன்பம் அடைய முடியுமோ? பிறரை ஏமாற்ற வேண்டுமானால் நின் நாமத்தைச் சொல் லிக் கொண்டிருக்கலாம். நான் அப்படி எல்லாம் சொல்லி ஏமாற்றிப் பிழைக்க விரும்பவில்லை ஐயனே! நல்ல படியாக உன் திருநாமத்தை நாவில் நவில் நினைக்கின்றேன். உன்னைப் புகழ்ந்து ஏத்த விரும்புகிறேன். மூன்று கரணங்களும் அமைதியோடு தூய்மையைப் பெற்றால் அப்போதுதான் நல்லவாறு உன் நாமத்தை நவின்று ஏத்தலாம். அதற்குரிய வன்மையை நீ அருளவேண்டும். ன்னை நாமம் நவின்று ஏத்த வல்லவனாகும்படி நீ அருள் புரிய வேண்டும். நீ உள்ள இடம் தேடி நான் ஏத்தும் ஆற்றல் பெறுவது எனக்கு எளிதன்று. நீயே எழுந்தருளி வந்து எனக்குத் திருவருளை வழங்கவேண்டும்.
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/57
Appearance