நல்லபடி நாமம் நவிலுதல் பொய், குறளை,கடுஞ்சொல், பயன் இல்லாதன ஆகிய அழுக் குச் சொற்களால் இது தூய்மை கெட்டுவிட்டது. இதைத் தூய்மை செய்ய வேண்டும். வழி உண்டா?
உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிய வேண்டும்; இ. மனத்தைப் பொறுத்த காரியம். வெய்ய சொல் வெய்ய சொல் ஆறித் தூய்மை செய்ய வேண்டும்; இது வாக்கைப் பொறுத்த காரியம். இறைவா! நீ எனக்கு மனம், வாக்கு, காயம் என்ற மூன்று கரணங்களையும் அளித்து, "நீ வாழ்" என்று அருள் செய்திருக்கிறாய். இந்த மூன்று கரணங்களினாலும் தீங்கு புரியாமல் வாழும் வாழ்வே நல்வாழ்வு. என்னுடைய மனத்தால் எண்ணும் எண்ணங்களும், வாயால் பேசும் உரைகளும், உடம்பாற் செய்யும் செயல்களும் நல்லனவாக அமைய வேண்டும். என் செய்கைகளோ என்னுடைய ஆசையால் நிகழ்வனவாக இருக்கின்றன. அது வேண் டும், இது வேண்டும் என்று மேலும் மேலும் ஆசைப்பட்டு அவற்றைப் பெறுவதற்காகப் பல வினைகளைப் புரிகின் றேன். நினைத்த பொருள் கிடைத்தால் அதனோடு நிற்ப தில்லை. அதற்கு மேலும் ஆசை விரிகிறது; அதனால் என் செயலும் விரிகிறது. செயல் விரிய விரிய நான் பல பாவங் களுக்கு ஆளாகிறேன். ஆதலின் ஆசையினால் செய்யும் செயல்களை நான் ஒழிக்க வேண்டும். அப்போதுதான் உள் த்திலே சாந்தி பிறக்கும். காமத்தை (ஆசையை)ச் சார்ந்த வினைகளை அகற்ற வேண்டும். நிஷ்காமனாக, விருப்பு இ லாதவனாகக் கன்மங்களைச் செய்து வாழவேண்டும். காம் வினையை அகற்றினால்தான் நான் வாழும் வாழ்வு தூய வாழ்வு ஆகும். வேகம் ஆறி, உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிய வேண் டும்; வெய்ய சொல் இன்றி ஆறித் தூய்மை செய்ய வேண்