.46 உள்ளம் கவர் கள்வன் உணா முடிவதே இல்லை. அத்தனை எண்ணங்களையும் தனக் குள்ளே மறைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பொல் லாத மனம். இதனுடைய கள்ளத்தனத்தை முற்றும் அறியவல்லவன் நீ ஒருவன்தான். சிவபெருமானே! இந்தக் கள்ளம் நிரம்பிய மனம் மற்ற எண்ணங்களையெல்லாம் தனக் குள் புதைத்து வைத்துக்கொண்டிருக்கும் போக்கை விட்டு, கள்ளம் ஒழிந்து, உன் அளவிலே ஒன்றி நிற்கும் குமா அதற்கு ஏதாவது வழி உண்டா? என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் எத்தனை வெப்பம்! பிறருடைய உள்ளத்தைச் சுடும் சொற்களைச் சொல்லவா இந்த நாக்கை நீ படைத்தாய்? தீயினாற் சுட்ட புண்ணாவது ஆறும், நாவினாற் சுட்ட வடு ஆறாது என்று சொல்கிறார்களே அது தெரிந்தும் துப்பாக்கியிலிருந்து குண்டு வீசுவதுபோல் அல்லவா இந்த நாக்கு வார்த்தை களை வெடித்துக் கொட்டுகிறது? உடம்பில் உள்ள அங்கங் களுக்குள் மென்மை உடையதாக, எப்போதும் ஈரம் உடை யதாக இந்த நாக்கை நீ படைத்தாய். இதிலிருந்து எழும் சொற்களும் மென்மை உடையனவாக ஈரம் உடைய யனவாக இருப்பதுதானே பொருத்தம்?* அதற்கு மாறாக வெய்ய சொல்ேைல சொல்லும் பழக்கத்தை உடையதாக இருக் றது என் நா. இந்த நிலை மாற வகை உண்டா? வெய்ய சொல் இன்றி ஆறுதலாகப் பேசும் வண்ணம் இந்த நாக் குக்கு ஏதேனும் வழி அருளுவாயா? வெய்யசொல் சொல் லாமல் ஆறி நல்ல சொல் பேச வேண்டும். அப்பனே! அப் போதுதான் என் நாக்குத் தூய நர்க்கு ஆகும். ஆகும். இதுவரை யிலும் தூயன அல்லாத பலவற்றைப் பேசி விட்டேன். க இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம், செம்பொருள் கண்டார் வாய்ச் சொல் (குறள்.)
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/55
Appearance