நல்லபடி நாமம் நவிலுதல் எதிலே பார்த்தாலும் படபடப்பு; வேகம். பேசினால் படபடப்பு: ஒரு காரியத்தைச் செய்தால் பரபரப்பு. பூமி யிலேதானே நிற்கிறோம்? அதற்குள் என்ன அவசரம்? ஒரு வரை ஒருவர் முந்திக்கொள்ள வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு ஓடுகிறோமே! எதற்காக இந்த ஓட்டம்? கடவுளே! இந்த வேகம் இல்லாமல், ஆறுதலாக வாழ் வகை இல்லையா? * வேகங் கெடுத்தாண்ட வேந்தன்" அல்லவா நீ? மனத்திலே உண்டாகும் வேகத்துக்கு ஏதாவது அளவு உண்டா? மேகத்தை வேகத்துக்கு அளவாகச் சொன்னார்கள்; அது சரிப்படவில்லை. காற்றைச் சொன் னார்கள்: அதுவும் பொருத்தமாக இல்லை. கடைசியில் மனத்தைச் சொன்னார்கள். மனோவேகத்துக்கு மிஞ்சின வேகம் இல்லை. அத்தனை வேகமாக ஓடுகிற மனம் ஒரு பொருளிலே ஒட்டி அமைந்து நிற்கிறதா? ஒரு கணத்தில் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் எழுகின்றன. வேகம் அடங்கி இந்த உள்ளமானது உன்னுடைய திருவடிக் கண்ணே ஈடுபடுகிறதா? ஒருமைப்பாட்டுக்கும் அதற்கும் வெகுதூர மாயிற்றே! இந்த மனம் தனக்குள்ளே எத்தனை எண்ணங்களை வைத்துக் கொண்டிருக்கிறது 1 அவற்றில் சிலவற்றையே மற்றவர்களால் உணரமுடிகிறது. மற்றவற்றைப் பிறரால்
- திருவாசகம், சிவபுராணம்.