புராணர் கோயில் றைவன் இல்லாத இடம் ஒன்று இல்லையென்றாலும் சில இடங்களில் அவன் இருப்பது தெளிவாகத் தெரியும்; பூமிக்கு அடியில் நீர் இருக்கிறது; என்றாலும் சில இடங் களிலிருந்து நீர் ஊற்றுக்கள் பொத்துக்கொண்டு வருகின் றன. இறைவனுடைய திருவருள் விளக்கம் மிகுதியாகத் தோன்றும் இடம் இரண்டை அருகருகே வைத்துச் சொல் கிறார் ஞானசம்பந்தர். இறைவன் இருக்கும் இடம் எது வானாலும் அது கோயில்தானே? இங்கே இரண்டு வகைக் கோயில்களைச் சொல்கிறார். ஒன்று அகக்கோயில்; மற் றொன்று புறக்கோயில் முதலில் அகக் கோயிலைப் பார்க்கலாம். அது ஒரு தாமரைக் கோயில்; தாமரையைப் போன்ற மலர்ச்சியும் மணமும் அழகும் உடைய கோயில். உள்ளமாகிய புண்டரிகக் கோயில் அது. அது. திருவள்ளுவரும் அதைச் சொல்லியிருக்கிறார். தன்னை நினைந்து அன்பு செய்கிற வர்களுடைய உள்ளமாகிய தாமரையில் எழுந்தருளி யிருப்பவன்' என்ற கருத்தோடு, "மலர்மிசை ஏகினான் ” என்று கடவுளைச் சொல்கிறார். அந்தக் கோயிலைப்பற்றிச் சற்று விரிவாக ஞானசம்பந்தர் சொல்கிறார், உள்ளக் கோயில்தான் கருப்பக்கிருகம். அதனோடு மண்டபங்களும் கோபுரமும் திருச் சுற்றாலையும் இருக்கின்றன. அனைத்தும் சேர்ந்தது ஆலயம். அன்பர்களுடைய உடம்பே ஆலயம். அதற்குள் இருக்கும் தாமரை போன்ற உள்ள அவை:
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/76
Appearance