இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66 உள்ளம் கவர் கள்வன்
பைத் தேடிக்கொள்ளுகிறது. ஆற்றிவு படைத்த மனிதன் எந்தக் கணத்திலும் இறக்கும் நிலையில் இருக்கிறான்; யமன் வாயில் நிற்பதுபோல நிற்கிறான். அவன் பின்னாலே பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழியும்போது அருள் செய்ய வரும் ஒருவனுடைய அருளாகிய பாதுகாப்பைத் தேடிக்கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா?--இந்தக் குறிப்பெல்லாம் தோன்றும்படி இந்த இரண்டு காட்சியை யும் இணைத்து ஆளுடைய பிள்ளையார் இந்தப் பாசுரத்தைப் பாடியிருக்கிறார். புலன்ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதாக, அஞ்சேல் என்று அருள்செய்வான் அமரும் கோயில் வலம்வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழைஎன்று அஞ்சிச் சிலமந்தி அலமந்து மரம்ஏறி முகில்பார்க்கும் திருஐயாறே,