உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதித் துணை வலம்வந்த மடவார்கள் நடமாட் முழவதிர மழையென்று அஞ்சிச் சிலமந்தி அலமந்து மரம்ஏறி முகிஸ்பார்க்கும் திருவை யாறே. 65 (திருக்கோயிலை வலம் வந்த தளிப்பெண்டுகள் நடனமிட முழவு முழங்க, மழை என்று அஞ்சி, சில மந்திகள் மனம் கலங்கி மரத்தின்மேல் ஏறி மேகத்தைப் பார்க்கும் திருவையாறு. அமரும் கோயில் திருவையாறு என்று கூட்டவேண்டும். மடவார்கள் என்றது கோயிலில் நடயிடும் உருத்திர கணிகை யரைக் குறித்தது. முழவு என்றது மிருதங்கத்தை. மந்தி -பெண் குரங்கு: குட்டியுடன் இருப்பதனால் பாதுகாப்புத் தேடவேண்டி யிருக்கும்; ஆதலின் அஞ்சின.) தமக்கு மரணம் வந்துவிடும் என்பதை முன்பே அறிந்து இறைவனை வழிபட்டவர்களுக்கு, உயிர் உடலை நீங்கும் காலத்தில் வந்து அவன் அருள் செய்வான். அப் போதைக்கு இப்போதே பாதுகாப்பைத் தேடிக் கொள்ள வேண்டும். இறைவன் எழுந்தருளி யிருக்கும் திருவை யாற்றில் உள்ள விலங்குகள்கூடப் பின்னால் தமக்குத் துன் பம் வருமே என்று அஞ்சிப் பாதுகாப்பைத் தேட முயல் கின்றன. மனத்துக்குக் குரங்கை வழக்கம். அந்த மனத்தால் இறைவனுடைய திருவடியை நினைந்து, முன்னாலே பாதுகாப்புச் செய்துகொள்ளும் இயல்பு. திருவையாற்றுத் தலத்தில் உள்ளாருக்கு உண்டு என்பதை அங்குள்ள மந்தியின் செயல் காட்டுகிறது. உவமை கூறுவது ஒரு நிலையின்றித் திரியும் குரங்கு உண்மையில் மழை வராதபோதும் மழை வருமோ என்று அஞ்சிப் பாதுகாப்

  • "கழைமேவு மடமந்தி மழைகண்டு மகவினொடும் புகவொண்

கல்வின், முழை மேவும்." (திருஞான. திருமுதுகுன்றம்.) 5