உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பலகலாம் விளைக்கும் புலன்வழிச் செல்லாப் பண்ணவர் உண்ணிறைந் தோங்கும் குலகலா விளக்கே காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே, முன்னநீ யன்று முளரியந் தடத்து முனிவற வந்தனை முளரி தன்னில்வந் தவனைத் தகைந்தனை யிதுவோ தகவுனக் காகுவ தையா செந்நெலுங் கரும்பும் புடைதெரி யாது செழித்திடும் பணைகள்சூழ் மோகைக் கொன்னளில் குவட்டுக் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. மான்றரு மகளை வேங்கையா நின்று வரைந்தனை யென்பது மென்னோ ஊன்றரு முடலை விரும்பலார்க் குள்ளா யென்பது மென்கொலோ கொந்திற் றேன்றரு மருவி யார்ந்திள மக்தி தியானமே செய்துவீற் றிருக்குங் கூன்றரு பிறைசார் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. சிலையெலாங் கோயில் கொண்டனை நெஞ்சச் சிலையினிற் கோயில்கொள் ளாயோ அலைதரு தமஞ்சா ரவுணனை மயிலா யாக்கினை யடியனேன் றமத்தைத் 112. 113. 114.