2 கந்தவேள் கதையமுதம் நேற்றைக்கு எனக்கு ஒரு கனவு உண்டாயிற்று. நான் 'ப்ரூப் படித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது என்னுடைய ஆசிரி யப்பிரானாகிய ஐயரவர்கள் தம்முடைய இயல்பான உடையுடன் எழுந்தருளினார். தலையில் பெரிய தலைப்பாகை, வேட்டி, சட்டை - இந்தக் கோலத்தில் எழுந்தருளி, "என்ன வேலை நடக்கிறது?" என்று கேட்டார்கள். "நான் 'ப்ரூப்' பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று சொல்லி அவர்கள் திருவடியில் விழுந்து வணங்கினேன். "எப்போதும் தங்கள் நினைவை மறக்காமல் இருக்கவேண்டும்; தங்கள் தொண்டில் ஈடுபடவேண்டும்" என்று சொல்லிக் கண்ணீர் விட்டேன். அப்போது ஐயரவர்கள், "நீ அமோகமாக இருப்பாய், எல்லாம் நன்றாக அமையும்" என்று ஆசி கூறினார்கள். அவர்களிடம் இருந்து வேலைசெய்த காலத்தில் நடந்தது போன்ற காட்சி. அந்தக் கனவு எனக்குத் தைரியத்தை உண்டாக்கியது. இன்றைக்குத் தொடங்குகிற விரிவுரைக்கு அவர்கள் ஆசி கூறினார்கள் என்று எண்ணுகிறேன். இது ஆண்டவனுடைய திருவருளால் அமைந்த கனவு என்றே நம்புகிறேன். என்னுடைய வழிபடு தெய்வமாகிய முருகன் எழுந்தருளி யிருக்கும் தலம் காந்தமலை.எந்தக் காரியம் செய்தாலும் காந்தமலை முருகப்பெருமானை நினைத்துச் செய்வேன். அந்தத் திருக்கோயிலில் பல காலம் ஈடுபட்டு வாழ்கிறவன் எளியேன். நேற்று அங்கிருந்து எதிர்பாராத வகையில் பிரசாதம் வந்தது. இந்த இரண்டும் சேர்ந்து என் உள்ளத்தில் நல்ல துணிவை ஏற்படுத்தின. இறைவன் திருவருள் இருந்தால் இப்படிப் பொருத்தமான காரியங்கள் நிகழும் என்பதை உணர்கிறேன். இறைவனுடைய சாந்நித்தியத்தைத் தம் வாழ்க்கையில் அவ்வப்போது இப்படி உணர்ந்தவர்கள் பலர் இருப்பார்கள். இப்படி இணைத்துப் பார்த்தால் அந்தப் பெருமை தெரியும். அல்லாதவர்களுக்கு அதைப்பற்றிக் கவலையிராது. ஆண்டவன் திருவருளில் ஈடுபட்டு அவனிடம் நம்பிக்கை கொண்டவர்களே இத்தகைய நிகழ்ச்சிகளில் ஆண்டவன் அருள் தொடர்பு இருக்கிற தென்று உணர்ந்து கொள்ள முடியும். அவர்கள் செய்கிற செயல் சிறியதாக இருக்கலாம்; பெரியதாக இருக்கலாம். சிறிய நிகழ்ச்சி
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/21
Appearance