உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதியின் தவம் "தக்கன் வேள்வித் தகர்தின்று" என்று மணிவாசகர் சொன்னார். $3 இறைவன் இவ்வாறு திருவாய் மலர்ந்தவுடன் இந்திராதி தேவர்களுக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. இறைவனிடத்தில் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமே என்று காத்திருந்தார்கள். 'அம் பிகையும், இறைவனும் ஒன்றுபட்டு வாழ்ந்தால்தான் குழந்தை தோன்றுவான். அம்பிகை ஒரு பக்கம் தவம் பண்ண, தட்சிணாமூர்த்தி வேறு ஒரு பக்கம் யோகியாக அமர்ந்திருக்கிறாரே ! இந்த நிலையில் நம் விருப்பம் எங்கே நிறைவேறப் போகிறது?' என்று எண்ணித் துயருற்றார்கள் தேவர்கள். அப்போது பார்வதியும், பரமேசுவரனும் ஒன்றுபட என்ன வழி என்று யோசித்தார்கள். மன்மதனை அழைத்து, அவனை இறைவன் மேலே மலர் அம்புகளைத் துவச் செய் தால் அவன் மௌனத்தை அகற்றலாம் என்று எண்ணினார்கள். பிரமன் மன்மதனை ஏவுதல் பிரமதேவன் மன்மதனைப் பார்த்து இந்த விருப்பத்தைச் சொன்னான். அங்கை மிலைச்சிய கண்ணுதல் வெற்பின் மங்கையை மேவநின் வாளிகள் தூவி அங்குறை மோனம் அகற்றினை இன்னே எங்கள் பொருட்டினில் ஏகுதி என்றான். (காமதகனம். 4.9 [மிலைச்சிய -குடிய. வெற்பின் மங்கையை - பார்வதி தேவியை.) இங்கே, நின் வாளிகள் தூவி என்று பிரமன் சொல்கிறான். "நீ அம்பை விட்டுப் போர் செய்' என்று சொல்லலாம்: "இறைவனுக்கு மலரைத் தூவி அருச்சனை செய்வதுபோலச் செய்" ான்றான். "எங்கள் பொருட்டாகப் போ" என்று வேண்டினான். இதைக் கேட்ட மன்மதன் அவ்வாறு செய்வது தகாது என்று சொன்னான். சூறாவளி வேகமாக வீசுகின்ற ஓரிடத்தில் பஞ்சைக் கொண்டுபோய்ப் போட்டால் அது எதிர்த்து நிற்குமா? "பூளைப் பூ, பெரிய சூறாவளியின்முன் நிற்க முடியாது. திருநீற்றைத் திரு