திரு அவதாரம் 111 நிறைமுடிப் பணியிசை நிலனும் வானமும் இறைமுடிக் கின்ற இவ் வெரியை நீக்கியே பிறைமுடிக் கொண்டிடு பெரும, எம்முடைக் குறைமுடித் தருள்எனக் கூறி வேண்டினார். (திருவவதாரப்.61.) (நிறைமுடிப் பணியிசை நிலனும் - நிறைந்த பல முடிகளையுடைய ஆதிசேடனாகிய பாம்பின்மேலுள்ள பூமியும். இறை - ஒரு கணத்தில்) . பிறைமுடிக் கொண்ட பெருமானே' என்று இங்கே சொல் கிறார்கள். "நீ எப்போதும் குளிர்ச்சியான சந்திரனைத் தரித் திருக்கிறவன் ஆயிற்றே. உன்னை அடைந்தால் குளிர்ச்சி பெற லாம். அப்படி இருக்க, இப்போது உலகத்தை எல்லாம் எரிக்கும் தீயை வெளியிட்டனையே!' என்ற குறிப்பை அதிலிருந்து பெறலாம். "நீ நினைத்தால் சந்திரனிலிருந்து அமுதத்தை வெளியிடலாமே என்று சொல்வது போலவும் இருக்கிறது. அஞ்சலி னவர்புகழ் அண்ணல் ஆகியோர் அஞ்சலி செய்திவை அறைந்து வேண்டலும் அஞ்சவி லம்சடை அணிந்த நாயகன் அஞ்சலிர் என்றுகை அமைத்துக் கூறினான். [அஞ்சு அல் ஐந்து இரவு "P (திருவவதாரம். 62.) திருமால் முதலியவர்கள் இவ்வாறு விண்ணப்பம் செய்தவுடன் சிவபெருமான் அபய ஹஸ்தம் காட்டி அஞ்சாதீர்கள் என்று சொன்னான். அஞ்சலினவர் புகழ் அண்ணல்' என்று திருமாலைச் சொல்கிறார் கச்சியப்ப சிவாசாரியார். பாஞ்சராத்திரம் என்ற ஆகமத்தை ஐந்து ராத்திரிகளில் திருமால் சொன்னார். அந்தப் பாஞ்சராத்திரத்தைக் கற்ற வைணவர்கள் புகழ்கின்ற திருமால் என்று பொருள். அஞ்சலி வம்சடை அணிந்த நாயகன் என்றும் கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார். வெப்பத்தால் வாடிய மனிதர்களுக்குத் தலையிலிருந்து கங்கையை வீட்டுக் குளிர்ச்சி செய்தவன் அல்லவா ? எம்பெருமானுக்கு வெப்பம் உண்டாக்கவும் தெரியும். குளிர்ச்சி உண்டாக்கவும் தெரியும். இப்போது குளிர்ச்சி உடைய செயலைச் செய்யப் போகிறான். ஆதலால்,
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/131
Appearance