110 கந்தவேள் கதையமுதம் காரணம் இல்லவன் கண்ணில் கான்றதீப் போருள் புரித்திடப் பிறந்த பான்மையால் ஓருயிர் தன்னையும் அழிவு செய்தில ; ஆரையும் எவற்றையும் அச்சம் செய்தவே. (கான்ற - வெளிப்பட்ட.] (திருவவதாரம்.50.) இறைவன் உயிர்க்கூட்டங்களுக்கு அச்சத்தை உண்டாக்கு வானேயொழியத் துன்பத்தை உண்டாக்கமாட்டான். அந்தக் கனலின் வெப்பம் கண்டு அம்பிகைக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. கால் சிலம்பு ஒன்றோடொன்று தாக்க ஓடி அந்தப் புரத்தை அடைந்தான். அப்போது தேவர்கள் எல்லாம், சிவபெருமானிடத்தில், ஐயனே, நாங்கள் குழந்தை வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்ள, பயங்கரமான தீயை எழுப்பிவிட்டாயே! நாங்கள் இனி எப்படி உய்தி அடைவோம் ?" என்று வருந்தினார்கள். வெந்திறல் அவுணரை வீட்டு தற்கொரு மைந்த னை அருள்கென வந்து வேண்டினேம்; அந்தமில் அழலைநீ அருள்தல் செய்தனை; எந்தையே எங்ஙனம் யாங்கள் உய்வதே ? (திருவவதாரப், 58.) [அவுணரை - அநரர்களை. வீட்டுதற்கு அழிப்பதற்கு.] "எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்கிப் பார்வதி அம்மையைக் கல்யாணம் செய்துகொண்டாய். ஆனால் நாங்கள் கேட்ட மகவினைக் கொடுக்கவில்லையே!" என்று குறையிரந்தனர். தண்ணீர் வேண்டு மென்று சொன்னால் கடப்பாரையையும், மண்வெட்டியையும் கொண்டுவந்து தருகிறமாதிரி தீப் பிழம்பு வந்து நிற்கிறது. அனல் வீசுகிறது, என்ன செய்வது? எங்களுடைய குறையை முடித் தருள வேண்டும். சந்திரசேகரப் பெருமானே, பூமியையும், வானத் தையும் ஒரு கணத்தில் அழிப்பதுபோல இருக்கின்ற இந்தத் தியை நீக்கிவிட்டு எங்கள் கருத்தை முடித்துத் தரவேண்டும்" என்று வேண்டினார்கள்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/130
Appearance