திரு அவதாரம் 109 ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும் ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி வேதமும் கடந்து நின்ற வில, ஓர் குமரன் றன்னை நீதரல் வேண்டும் நின்பால், நின்னையே நிகர்க்க என்றர். (திருவவதாரப்.42.) [ஏது -காரணம்.] "பேதம் இல்லாமல் முழுமையாக இருக்கிற பெருமானே, உன்னைப் போல ஒரு குழந்தையை எங்களுக்கு நீ தரவேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். ஆறு பொறிகள் அப்போது இறைவன் தன் அஞ்சு முகத்தோடு கீழே உள்ள அதோ முகத்தையும் கோற்றி ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புப் பொறிகளைத் தோற்றச் செய்தான். வந்திக்கும் மலரோன் ஆதி வானவர் உரைத்தல் கேளாப் புத்திக்குள் இடர்செய் யற்க, புதல்வனைத் தருதும் என்னா அத்திக்கு நிகர்மெய் அண்ணல் அருள்புரிந் தறிஞ ராயோர் சிந்திக்கும் தனது தொல்லைத் திருமுகம் ஆறும் கொண்டான். (திருவவதாரம். 43.) (இடர் செய்யற்க வருந்தாதீர்கள். அந்திக்கு நிகர் மெய் - அந்தி வானத்துக்கு ஒப்பான சிவப்பு நிறத்தையுடைய திருமேனி .தொல்லை - பழமையான ] பிரமன் முதலானவர்கள் வருத்தமுறாவண்ணம் அவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுத் தன் பழைய ஆறு முகத்தோடு அந்தி வான் மேனி அண்ணல் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்க மனம் கொண்டான். ஆறு முகத்திலிருந்து பொறிகள் தோன்றின. அந்தக் கனல் எங்கும் படர்ந்து கைலாசம் முழுவதும் மண்டியது. அதைப் பார்த்து எல்லோரும் அச்சம் கொண்டார்கள். இந்திரன்,வாயு, அக்கினி எல்லோரும் நடுங்கினார்கள். எங்கே பார்த்தாலும் அந்தத் தீக் கொழுந்து படர்ந்தது. ஆனால் எந்த உயிரையும் கொல்லவில்லை. அது நன்மையை உண்டாக்க எழுந்த சுடர். தேவர்கள் அஞ்சினா லும் அவர்களுக்கு எந்த வகையான ஊறுபாடும் நேரவில்லை.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/129
Appearance