உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கந்தவேன் கதையமுதம் காலத்திலும் இருக்கிறவன் அவன். மிக மிகப் பழையது என்று ஒன்றைத் தெரிந்து கொண்டு அதுதான் பழையது என்று நிலை நாட்டினால் அதற்கு முன்பாகவும் அவன் இருக்கிறான். இனிமேல் வரப்போகும் புதுமையைப் பற்றி எண்ணி ஒருவகையாகத் தீர்மானம் செய்து, இதுதான் மிகமிகப் புதிய பொருள் என்றால் அதற்கப்பாலும் மிகப் புதிய பொருளாக அவன் இருக்கிறான். இதனைத்தான், 1 "முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே' என்று மணிவாசகர் சொல்கிறார். இதையே இந்தப் பாட்டில் சொல்கிறார் கச்சியப்ப சிவாசாரியார். இந்தக் கருத்தை நாவுக்கரசர் மிக அழகாகச் சொல்கிறார். ஒரு பழைய ஆலமரம், நூறு வருஷங்கள் ஆனது. அதன் பழமையை மரத்தின் ஊடேயுள்ள வைரம் காட்டும். அதிலே புதுமையும் இருக்கிறது. புத்தம் புதியதாக அன்று தோன்றிய தளிர் ஆலமரத்தின் உச்சியில் இருந்து புதுமையைக் காட்டும். குருத்து அது; வெள்ளையாக இருக்கிறது; சிறிது நேரத்தில் இளம் பசுமை நிறம் கொண்டுவிடும். மிகப் பழமையான காலத்தைக் காட்டுவதற்குறிய வைரமும், மிகப் புதுமையைக் காட்டுவதற்குரிய குருத்தும் ஆலமரத்தில் இருக்கின்றன. ஆண்டவன் அப்படித்தான் இருக்கிறான். காலம் என்னும் மரத்தில் வைரமாக இருக்கிறான்; குருத்தாகவும் இருக்கிறான். இதை நாவுக்கரசர் திருத்தாண்ட கத்தில் சொல்கிறார். குருகாம் வயிரமாம். இவற்றையெல்லாம் அறிந்த கச்சியப்பர் அந்தக் கருத்தையே ஒரு முழுப் பாட்டில் சொன்னார். தேவர் வேண்டுகோள் இவ்வாறு தேவர்கள் சிவபெருமானைத் தொழுது, புகழ்ந்து, பிரார்த்தனை செய்தபோது, "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று இறைவன் கேட்க, அவனிடம் தேவர்கள் கூறத் தொடங் கினார்கள்.