உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 கந்தவேள் கதையமுதம் "உயிர்க்கு உயிராய் " என்பதை இங்கே சற்றுக் கவனிக்க வேண்டும். நாம் கடவுளைக் காண்கிறோமா? கண்ணுக்குத் தெரியாமல் கடவுள் இருக்கிறாரே!" என்று பலர் ஐயுறுகிறார்கள். தாய் ஒரு வீட்டில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. அதன் அழுதுகொண்டிருந்தாள். ஒரு பெரியவர் வந்து, "ஏன் அழுகிறாய் ?" என்று கேட்டார். "என் குழந்தை இறந்து போய் விட்டது. அழுகிறேன் " என்றாள் தாய். "உன் குழந்தைதான் அதோ இருக்கிறதே; ஏன் அழுகிறாய்?" என்றார் அவர். "குழந்தையீன் உயிர் போய்விட்டது" என்று தாய் சொன்னாள். "அந்த உயிர் எப்போது வந்தது? பார்த்தாயா? உயிர் போய்விட்டது என்கிறாயே; போனதையாவது நீ பார்த்தாயா?" என்றார். 86 உ சுவாமி, இந்தக் குழந்தை நான் கூப்பிட்டால் ஓடி வரும். கையையும் காலையும் அசைக்கும். இப்போது அப்படிச் செய்யவில்லை. முன்பு உயிர் இருந்தது, இப்போது போய்விட்டது" என்று சொன்னாள். உடம்பு இருக்க, அதை இயக்குவது உயிர். அது போல் உயிரை இயக்க ஓர் உயிர் இருக்க வேண்டும் அல்லவா? அதுதான் ஆண்டவன். அதனால் 'உயிர்க்கு உயிர்' என்று இங்கே சொன்னார். "பரமசிவனே தன் திருவிளையாடலால் குழந்தையாக வந்திருக் கிறான். சிவபெருமானுக்கும் ஆறு முகமுண்டு; சிவபெருமானுக்கும் இவனுக்கும் பேதம் இல்லை." ஈச னேஅவன் ஆடலால் மதலைஆ யினன்காண் ; ஆசி லாஅவன் அறுமுகத்து உண்மையால் அறிநீ; பேசில் ஆங்கவன் கரனொடு பேதகன் அல்லன், தேக லாவுஅகள் மணியிடைக் கதிர்வரு திறம்போல். அவைபுகு.129.) (ஈசன் - சிவபெருமான். ஆடலால் - திருவிளையாட்டால். மதலை - குழந்தை.அறு முகம் சிவனுக்கும் உண்டு. அறிதி - தெரிந்து கொள். பரன் - பரமசிவன். பேதகன்- வேறுபட்டவன். மணி சிவனுக்கும் கதிர் முருகனுக்கும் உவமை.) 37 "மாணிக்கமும், அதன் ஒளியும் போல அவ்விருவரும் அபேத மானவர்கள்' என்று வீரவாகு தேவர் சூரபன்மாவுக்கு அறிவுறுத்தினார்.