உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 359 வில்லை. மிகவும் இழிந்தவன். பாம்பையும் சந்திரனையும் ஒன்றாகத் திருமுடியில் வைத்திருக்கிற பரம்பொருளாகிய சிவபெருமானு டைய ஞானக் கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமானது பெருமையை நீ சிறிதும் உணரவில்லை. பாலன் என்று சொன்னாய்; சிறு பிள்ளை என்று சொன்னாய்' என்று சொல்லி மேலும் பேசலானார். . உய்ய லாவதோர் பரிசினை உணர்வுருாது உழலும் கைய. கேண்மதி: கட்டுசவி மதியொடு கலந்த செய்ய வார்சடைப் பரம்பொருள் திருநுதல் விழிசேர் ஐயன் மேதகவு உணர்ந்திலை ; பாலன்என்று அறைந்தாய். அவை புகு.124.) கேண்மதி (றைய - கீத்மகனே. கட்செவி - பாம்பு மேதகவு - மேன்மை. கேட்பாயாக.) பாம்பும், சந்திரனும் ஒன்றுக்கொன்று பகை. ஆனால் சிவ பெருமாள் திருவருளினால் இரண்டும் ஒன்றாக இருக்கும். அசுரர் களும் தேவர்களும் பகைவர்களாய் இருந்தாலும் இறைவனுடைய திருவருளால் ஒன்றாகத் தீமை நீங்கி வாழலாம். அதற்குரிய முயற் சியைச் செய்' என்ற குறிப்பை வைத்து, கட்செவி மதியொடு கலந்த செய்ய வார்சடைப் பரம்பொருள் என்று சொன்னார். சொல்லலானார். மேலும் முருகப் பெருமானின் பெருமையைச் "சிறு பிள்ளை என்று நீ சொல்கிறாயே; அவனுடைய வயசை உன்னால் அறிய முடியாது. அறிவுத் திறத்தால் நீ ஒருவரை முன்னவர் என்றால், அந்த முன்னவருக்கும் அவருக்கு முன்ன வருக்கும் முன்னவனாக இருக்கிறவன் எம்பெருமான். அவனுக்கு ஒப்பார் யாரும் இல்லை. அவனே ஈசன் என்னும் திருநாமத்தைத் தாங்கியிருப்பவன். எல்லா உயிர்களுக்கும் உயிராய், அருவாய், உருவமாய், எல்லோருக்கும் தாய் தந்தையாக இருக்கும் பரம் பொருளே எங்கள் முருகப் பெருமான். B முன்ன வர்க்குமுன் ஆகுவோர் தமக்கும்முற் பட்டுத் தன்னை நேரிலாது ஈசனாம் தனிப்பெயர் தாங்கி இன்உயிர்க் குஉயிராய்,அரு வுருவமாய், எவர்க்கும் அன்னை தாதையாய் இருந்திடும் பரமனே ஆவன்காண். அவை புகு.138.) [நேர் இலாது-ஒப்பாக யாரும் இல்லாமல்.]