உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 கந்தவேள் கதையமுதம் "நான் தேவர்களை ஏன் சிறை வைத்தேன் தெரியுமா? என்னுடைய அசுர குலத்தைச் சேர்ந்த பல பேர்களுக்குத் தேவர்கள் துன்பம் இழைத்தார்கள்; அவர்களை அழித்தார்கள். ஆகையால் நான் தேவர்களுடைய பதவியை மாற்றி, ஏவலாளர்களாக வைத்திருக் கிறேன். சிறையிலும் வைத்தேன். அவர்கள் முன்னால் செய்த கொடுமைக்குரிய தண்டனை செய்தேனேயன்றிக் காரணமின்றி ஒரு காரியமும் செய்யவில்லை என்று அவன் ஒரு சமாதானம் சொன்னான். நறைகொள் தார்முடி அவுணர்தம் குலத்தினை நலிந்து வறுமை செய்தனர் கடவுளர்; ஆவர்திரு மாற்றிக் குறிய ஏவலும் கொண்டனன் ; ஒழுக்கமும் கொன்றேன்; சிறையும் வைத்தனன் : எம்குடித் தமர்முறை செய்தேன். (அவை புரூ.135.) (நறை - தேன். களிந்து - துன்புறுத்தி. வறுமை செய்தனர் - அழித்தார்கள்; பதவியிழந்து வறியவர்களாகும்படி செய்தார்கள் எனலும் ஆம். கடவுளர்- தேவர்கள். குறிய ஏவல் - குற்றேவல். ஒழுக்கமும் - அவர்கள் ஒழுகலாற்றையும். எங்கள் குடித்தமர் முறை - எம் குலத்திலே உதித்தவருக்கு ஏற்ற முறையை.) பொல்லாதவன் தான் செய்த காரியத்திற்கு ஏதாவது காரணத்தைக்' கற்பனையாகச் சொல்வது வழக்கம்.

இனிமேல் பிரளயம் வந்தாலும், இந்த உலகம் முழுவதும் சமுத்திரத்தில் அமிழ்ந்தாலும் தேவர்களை நான் கிறையிலிருந்து விட மாட்டேன். இவர்களை எல்லாம் எல்லா அண்டங்களுக்கும் மேலாகப் பிரளயத் தண்ணீர் கூடப் புகாத இடத்தில் கொண்டுபோய்ச் சிறை வைத்து விடுவேன் என்று சூரன் வீறாப்புப் பேசினான். 2 நெடிய மால்மகன் உறங்கும்நாள் ஆணையை நீங்கித் தொடுபெ ருங்கடல் உலகெலாம் கொள்ளினும் சுரழை விடுவன் அல்லன்யான்; வீடரும் சிறையினை விண்மேல் டைய அண்டத்தின் உச்சியின் ஒருதலை உய்ப்கேகள். - (மால்மகன் பிரமன். அவை த.116.) அவன் உறங்கும் நாள், பிரயை காலம். ஆணையை நீங்கி - -என் ஆணையை வீட்டு நீங்கி. விடரும் - விடுதலை பெறுவதற்கரிய. ஒருதலை ஓரிடத்தில்.] வீரவாகு கூற்று வீரவாகு தேவர் அதைக் கேட்டார்; "அரக்கனே, நீ உய்வதற் குரிய ஒரு வழியை நான் சொன்னேன். அதைச் சிறிதேனும் உணர