உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 கந்தவேள் கதையமுதம் உருத்திர ஜன்மன் வரலாறு திருத்தகு மதுரை தன்னில் சிவன்பொருள் நிறுக்கு மாற்றல் உருத்திர சன்ம னாகி உற்றிடும் நிமலன் என்கிறார். அது பழைய கதை. ஒரு காலத்தில் பாண்டி நாட்டில் ஒரு கொடிய பஞ்சம் வந்தது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் அந்தப் பஞ்சம் இருந்தது. தானும், தன் குடும்பமும் வருந்துவதைய் பாண்டியன் எண்ணவில்லை. அங்கே இருந்த புலவர்கள் பசியினால் வருந்துவார்களே என்று எண்ணி,வளமுள்ள இடத்திற்கு அவர்களைப் போகச் சொன்னான். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பஞ்சம் தீர்ந்தது. புலவர் பெருமக்களைத் திரும்ப அழைத்துக் கொண்டான். பாண்டியனுக்கு, முன்னாலேயே ஒர் ஆசை இருந்தது. தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள் உண்டு. அதில் பொருளதிகாரம் இருக்கிறது. என்றாலும் தமிழுக்கே சிறப்பான அகப்பொருள் பற்றித் தனியாகவே ஓர் இலக்கண நூல் இல்லையே என்று பாண்டியன் நினைந்தான். எந்தப் புலவரையேனும் தனியாக அகப்பொருள் இலக்கணம் இயற்றச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். நடுவில் பஞ்சம் வந்தது. பஞ்சம் தீர்ந்தவுடன் திரும்பப் புலவர் பெருமக்கள் வந்து கூடினர். ஆயினும் பொரு விலக்கணத்தில் சிறந்த புலமையையுடையவர் யாரும் வரவில்லை. அதனால் பாண்டியன் வருந்தினான். ஆலவாய்ப் பெருமானிடம் சென்று, பஞ்சம் போனாலும், என் மனத்திலுள்ள பஞ்சம் போக வில்லையே!" என்று வருந்தினான். ஒரு நாள் கோவிலில் பூசைசெய்யும் சிவாசாரியார் ஆண்டவனது பீடத்தைக் துடைக்கும்போது ஜல் ஜல் என்ற தாமிரத் தகடு ஓசை கேட்டது. அவற்றை எடுத்துப் பார்த்தால் அந்தத் தகடுகளில், "அன்பின் ஐந்திணை' என்று தொடங்கி 60 சூத்திரங்கள் இருந்தன. அகப்பொருள் நூலாக அது இருப்பதைக் கண்டு பாண்டியனிடம் கொண்டுபோய்க் கொண்டுபோய்க் கொடுத்தார். எம்பெருமான் திருவருளால் குறை தீர்ந்தது என்று பாண்டியன் மகிழ்ந்தான். கடைச்சங்கத்தில் இருந்த 49 பேர்களிடமும் அதைக் கொடுத்து உரை எழுதச் சொன்னான் பாண்டியன். 49 உரைகள் கிடைத்தன.