சூரபன்மன் வதை 445 அந்தப் படைகள் யாவும் அழிந்தன. மறுபடியும் படைகள் வரவே, முருகன் உங்காரம் செய்தான். அவை யாவும் அழிந்தன. மறுபடியும் படைகள் வந்து கொண்டிருந்தன. நம்முடைய ஊர்களில் மேல்மாடியில் நெல்லை உலர்த்துவார்கள். பின்னர் அவற்றைக் குவித்துத் தளத்தில் உள்ள ஓர் ஓட்டை வழியே தள்ளுவார்கள். மேல் இருந்த அந்த ஓட்டை வழியே தள்ளினால் கீழே நெல் விழுந்துகொண்டே இருக்கும். அதுபோல அண்ட கோளத்தின் துவாரம் வழியாக அசுரர்கள் புங்கானு புங்கமாக வந்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தான் முருகப் பெருமான். அப்போது அப்பெருமான் தன் கையில் இருந்த வேல் அல்லாத மற்ற ஆயுதங்களைப் பார்த்து, "நீங்கள் வெவ்வேறு உருவாகச் சென்று அசுரர்களின் தானையை அடுங்கள்' என்று சொன்னான். திருத்தகு மதுரை தன்னில் சிவன்பொருள் நிறுக்கு மாற்றல் உருத்திர சன்ம னாகி உற்றிடும் நிமலன், வெம்போர் அருத்திகொள் கணிச்சி, சூலம்,ஆழி,தண்டு எழுவ தாகும் கரத்திளில் படைகள் தம்மை நோக்கியே கூயூற லுற்றன். வென்றியம் படைகள் கேண்மோ: விரைந்துடன் தழுவி தம்பால் சென்றிடும் ஆனிகந் தன்னைச் செல்நெறி பெருமல் அப்பால் நின்றிடு படையை எல்லாம் நீவிர்பல் உருக்கொண் டேகிக் கொன்றிவண் வருதிர் என்று கூறிமற் றவற்றைத் தொட்டான். சூரபன்மன் வதை. 261, 262,) (சிவன் பொருள் நிறுக்கும் ஆற்றால். சிவபெருமான் இயற்றிய பொருளிலக்கணத் தின் உரையை ஆய்ந்து பார்க்கும் முறையினால். போர் அருத்தி - போர் செய்வதில் ஆசை. கணிச்சி - மமு.ஆழி - சக்கரம். எழு - உலக்கை. கேண்மோ - கேளுங்கள். அளிகம் - படை, தொட்டான் - ஏகினான்.] இங்கே கச்சியப்பர் ஒரு வரலாற்றை நினைவூட்டுகிறார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/465
Appearance