உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 கந்தவேள் கதையமுதம் வெம்பு ரைத்தொழிற்கு ஒருவனாம் கயவநீ வெறிதே வம்புஉ ரைத்தனை ; ஆவதுஒன்று இல்லை;நின் மார்பம் செம்பு ரைப்பட யாம்விடு கின்றதோர் திறல்வாய் அம்புஉ ரைத்திடும் மாறுஉனக்கு என்றனன் அமலன். (சூரபன்மன் வதை. 157.) (வெம்புரைத்தொழிற்கு - கொடிய குற்தச் செயல்களுக்கு. வெறிதே -வீணே. செம்புரைப்பட - சிவப்பான துளைபடும்படி மாறு - விடை.] 'வாயால் பேசுவதில் பயன் இல்லை.அம்பினால் பேசுவேன்" என்றான் முருகன். போர் தொடர்தல் அப்போது வீரவாகு தேவர் முருகனுக்குத் துணையாக நின்று பொருதார். சூரன் அவரைப் பிடித்து வானில் நெடுந்தூரம் செல்லும் படி எறிந்தான். அங்கிருந்து அவர் முருகனை வந்தடைந்தார். மேலும் முருகனும் சூரனும் சண்டையிட்டனர். தேவர்கள் அக்கினியை முருகனுக்குக் கொடியாக இருக்க வேண்டும் என்று வேண்டினர். அப்படியே அவன் முருகப் பெருமானுக்குக் கொடியாக வந்தான். கோழிக் கொடியைப் போல உருவெடுத்து, தேவ தேவனின் தேர்மிசை இருந்து குரல் கொடுத்தான். ஏன லோடும் எரிதழற் பண்ணவன் வாவு குக்குட மாண்கொடி ஆகியே தேவ தேவன் திருநெடுந் தேர்மிசை மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட. (சூரபன்மன் வதை. [தழல்பண்ணவன் - அக்கினிதேவன்.வாவு - தாவும். குக்குடம்-கோழி] 206.) நேருக்கு நேராக நின்று பல காலம் போரிட்ட சூரன் உடல் நலிந்தான். திடீரென்று மறைந்தான். கடல் நடுவிற்குப் போனான். விண்ணுக்குப் போனான். மேருவுக்குப் போனான். பாதாளத்திற்குள் போனான். முருகனும் அங்கங்கே அவனோடு சென்று பொருதான். சூரன் தேர் அழிந்தது. உடனே சூரன் இந்திரஞாலத் தேரை நினைத்தான். அது வந்தவுடன் அதில் ஏறிப் போர் செய்தான். அண்டங்களின் முகட்டுக்குச் சென்று முருகப் பெருமான் அடைத் திருந்த வாயில்களைத் தகர்த்தான். மறுபடியும் அவனுக்கு உதவி யாகப் படைகள் வந்தன. முருகன் சிறிது விழித்துப் பார்த்தன்.