1 சூரபன்மன் வதை சூரன் கூறுதல் 443 அப்போது சூரன் முருகனை எதிர்த்து வந்து நின்றான். "சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமானுடைய கிருபையினால் நான் சாகா வரம் பெற்றிருக்கிறேன். எப்போதும் இதே பொலி வோடு இருப்பேன். தேவர்கள் மறந்தும் கூட என்னோடு போர் செய்யமாட்டார்கள். தவறி என்னோடு சண்டையிட்டு இறந்து போனவர் பல பேர். சிறு பையனாகிய நீ இதைத் தெரிந்துகொள்ள வில்லை போலிருக்கிறது!" சிறந்த வான்மதி மிலைச்சினோன் அருள்புரி செயலால் இறந்தி டேனியான்; என்றும்இப் பெற்றியாய் இருப்பேன்; மறந்தும் என்னொடு பொருதிலர் தேவரும்; மலைந்தே இறந்து ளார்பலர்; உணர்ந்திலை போலும்நீ, இதுவே. (சூரபன்மன் வதை. 184:) - [மிச்சினோன் -சூடியவன். மலைந்தே - போர் செய்தே.] "என்னுடைய பெரிய படைகளை எல்லாம் அழித்தாய். சிறு பிள்ளை என்று உன்னை நான் நினைத்திருந்தேன். இனிமேல் அப்படி நினைத்து உன்னை விடுவதில்லை. நீ புற முதுகு காட்டி ஓடினாலும் விரைவில் உன்னை அழித்து விடுவேன். உனக்குப் பக்க பலமாகிய தேவர்களையும், பூத கணங்களையும் பொடிப் பொடியாக அழித்து விடுவேன்" என்று சூரபன்மன் வீரம் பேசினான். உடைப்பெ ரும்படை செறுத்தனை ; பாலன்கன்று உன்னை விடுப்பது இல்லையால் ; வெரிந்து கொடுக்கினும் விரைவில் படுப்பன்; வானவர் தொகையுடன் பாரிடர் தமையும் கெடுப்பன் என்றனன், தன்பெருங் கிளையுடன் கெடுவான். (சூரபன்மன் வதை.156.) (செறுத்தனை அழித்தாய். வெரிந் -முதுகு. படுப்பன் - அழிப்பேன். பாரிடர். பூதகணத்தினர்.] முருகன் கூறுதல் "பொல்லாத காரியங்களுக்கு எல்லாம் ஒருவன் என்று சொல்லும்படி இருக்கிற கயவனே, நீ வீணே வம்பு வார்த்தைகளைப் பேசுகின்றாய். அதனால் எந்தப் பயனும் உண்டாகப் போவதில்லை. நாம் விடுகின்ற அம்பினால் உன் மார்பு பிளக்கப்பட்டுச் சிவப்பாகப் போகிறது. இந்த அம்புதான் உனக்குப் பதில் சொல்லும்" என்றான் முருகன்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/463
Appearance