சூரபன்மன் வதை ஏழாவது நாள் சூரபன்மன் தானே போருக்கு வரலானான். ஆயிரத்தெட்டு அண்டங்களில் உள்ள படைகளையெல்லாம் சூரபன்மன் வருவித்தான். கவசம் முதலியன பூண்டு இந்திரஞாலத் தேரில் ஏறிப் போர்க்களம் வந்தான். முருகப் பெருமான் வாயுதேவன் செலுத்திய தேரில் ஏறி வந்தான். முருகனுக்கும் சூரனுக்கும் நிகழ்த்த போர் போர் மூண்டது. முன்னால் சென்ற பூத கணங்கள் தோற்று ஓடினார்கள். வீரவாகு தேவர் சூரனை எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டார். இப்படிப் படைகள் எல்லாம் அழிந்து, வீரவாகு தேவரும் மற்றவர்களும் இளைப்புற்று மீண்டதைப் பார்த் தான் முருகன். சிறிது புன்னகை செய்தான். பாரிடங்களின் படையெலாம் நெக்கதும் பாங்கள் வீர மொய்ம்பனும் இளைஞரும் வருந்திமீண் டதுவும் கார்இளம்புரை அவுணர்தம் செய்கையும் காணா மூரல் செய்தனன், எவ்வகைத் தேவர்க்கும் முதல்வன். (சூரபன்மன் வதை. 84.) [பாரிடங்களின் படை - பூதகணங்களின் சேனை. நெக்கதும் - தோல்வியுற்றதும். வீர மொய்ம்பன் - வீரவாகு. கார் இனம்புரை - மேகக்கூட்டத்தை ஒத்த.] போர்க்களத்திற்கு வந்த முருகன், அசுரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் தேரை ஓட்டச் செய்து கணைகளை விட்டான். இடதுசாரி, வலதுசாரியாகச் சுழன்று ஆங்காங்குள்ள அவுணர்களை மாய்த்தான். அங்கே இருந்த அவுணர்கள் மாய மாய வெவ்வேறு அண்டங்களிலிருந்து அசுரர்கள் வந்து எதிர்த்தார்கள். இப்படி அசுரர்கள் அழிய அழிய, மேலும் மேலும் வெவ்வேறு அண்டங்களி லிருந்து புதிய ஆட்கள் வருவதைக் கண்ட முருகப் பெருமான் அம்புகளை மாரிபோல் விட்டு அண்டகோளத்தின் மேலுள்ள உச்சி வாயிலை அடைந்து விட்டான். அறுத்து வெம்முனைத் தானையை ஆண்டுசெல் அணிகம் மறித்தும் வந்துவந்து அடைதரும் இவண்என மனத்துன் குறித்து வெங்கணை மாரியால் அண்டகோ வகையின் நெறித்த ரும்பெரு வாயிலை அடைத்தனன் நிமலன். (சூரபன்மன் வதை. 146.} [வெம்முனைத்தானையை - கொடுமையான போர்க்களத்தில் வந்த சேனையை. அணிகழ் -படை]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/462
Appearance