உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கமுகாசுரன் வதை பொன்னைநிலத் தன்னைப் புதல்வர்களை மங்கையரைப் பின்னை உளபொருளை எல்லாம் பெறலாகும்: என்னை உடைய இளையோனே, இப்பிறப்பில் உன்னை இனிப்பெறுவ துண்டோ? உரையாயே. 441 (சிங்கமுகாசுரன். 468.} "கிரவுஞ்ச மலைப் பக்கத்தில் இருந்து ஆட்சி செய்த தாரகன் இறந்தபோதே என்னுடைய ஒரு கை போயிற்று. அப்போதே என் உள்ளம் துயரை அடைந்தது. இப்போது நீ போனதனால் என்னுடைய இரண்டாவது கையும் போயிற்று. எல்லாவற்றையும் இழந்த வறியவனாக இருக்கிறேன், நான்" என்று சூரன் புலம்பினான். பொற்றைக்கு அயல்இருந்த பூட்கைமுகன் துஞ்சியபின் ஒற்றைப் புயம்போய் உளம்தளர்ந்து வைகினன்யான்; இற்றைப் பகல்நீ இறந்தாய், அரிமுகனே! மற்றைப் புகமும் இழந்தேன் வறியேனே. ( சிங்கமுகாசுரன். 478.) பொற்றை - மலை; இங்கே கிரவுஞ்சகிரி. பூட்கைமுகன் - யானை முகமுடைய தாரகாசுரன்.] 65 'நாளைக்கே அந்த முருகனுடன் போரிட்டு அவனை அழிப்பேன்" என்று வீரசபதம் செய்தான் சூரன். 56