உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 கந்தவேள் கதையமுதம் முதல் சங்கத்தின் தலைமைப் புலவர்களாகத் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த குமரவேளும் இருந்தார்கள். இறையனார் அகப்பொருள் உரையில் இந்தச் சங்கங்களைப் பற்றிய வரலாறு வருகிறது. அங்கே மூன்று சங்கங்களைப் பற்றிய செய்திகளும் தெளிவாகக் காணப்படுகின்றன. முருகப் பெருமான் முதல் சங்கத்தில் புலவனாக இருந்தான் என்பதை எண்ணி, is சங்கத் தமிழின் தலைமைப் புலவா தாலோ தாலேலோ " என்று குமரகுருபர சுவாமிகள் பாடுகிறார். இங்கே கச்சியப்பர், சங்கத் தவர்க்குள் தலையாம் தமிழ்ப்புலவன் என்று சொல்லுகிறார், தன் தம்பியாகிய சிங்கமுகன் உயிரிழந்து கீழே விழுந்து கிடப் பதைக் கோபுரத்திலிருந்து பார்த்தான் சூரபன்மன். அவன் மயங்கி விழுந்து கிடக்கிறான் என்றே நினைத்தான். ஆனால், அவன் இறந்து விட்டான் என்ற செய்தியை ஒற்றர்கள் வந்து சூரபன்மாவிடம் சொன்னார்கள். உடனே கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்து இறந்து கிடந்த தன் தம்பியைப் பார்த்தான். அவனுக்குத் துயரம் பொத்துக் கொண்டு வந்தது. பல வகையாகப் புலம்பினான். மங்குல் எனவீழ்ந்து மறிந்து நிலமிசையே அங்கை புடைத்திட்டு அலமந்து தொல்வலியும் துங்க விறலும் நலனும் தொலைவுஎய்தப் பொங்கு துயர்க்கடலில் மூழ்கிப் புலம்புறுவான். [மங்குல் - மேகம்,) சூரன் புலம்பல் (சிங்கமுகாசுரன். 405.) "பொன்னை இழந்தால் திரும்பப் பெறலாம். நிலத்தை இழந்தால் பெறலாம். புதல்வர்கள் இறந்து போனால் மீண்டும் பெறலாம். மங்கையர்களைப் பெறலாம். எந்தப் பொருளை இழந் தாலும் திரும்பப் பெறலாம். ஆனால் எனக்குத் தம்பியாகிய உன்னை நான் இழந்து விட்டேனே ! உன்னை எப்படித் திரும்பப் பெறுவேன்? உன்னைப்போல் வேறு யார் எனக்குத் தம்பி வருவார்கள் ?"