உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கமுகாசுரன் வதை 439 பொடிப்பொடி யாக்கினான். தண்டை எடுத்து விட்டான் சிங்கமுகா சுரன். முருகப் பெருமான் தன் கையிலுள்ள வச்சிராயுதத்தை ஓச்சினான். அது சென்று சிங்கமுகாசுரன் விட்ட தண்டைப் பொடிப் பொடி யாக்கியது; சிங்கமுகாசுரன் மார்பைத் தாக்கி அவன் உயிரைப் போக்கியது. அவன் மார்பிலிருந்து இரத்தம் கொப் புளித்தது. விடுத்திடு குலிசம் ஏகி, விரைந்து எதிர் தண்டந் தன்னைப் பொடித்தது போலும் என்னப் பூழிசெய்து அடுக்கல் செல்லும் இடித்தொகை என்ன மார்பத்து எய்தியே, அவுணன் ஆவி குடிந்தது; புறத்துச் செந்நீர் கொப்புளித்து ஏகிற் றன்றே. (சிங்கமுகாசுரன். 464.) குவிசம் - வச்சிராயுதம். தண்டம் - கதை. பூழிசெய்து - புழுதியாக்கி. அடுக்கல்- மலமேல், செந்நீர் -இரத்தம்.] வச்சிராயுதத்தால் தாக்கப்பட்டு, உயிர் நீத்த சிங்கமுகன் கீழே கிடந்தான். அவனைக் கொன்ற வச்சிராயுதம் ஆகாச கங்கைக்குச் சென்று தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, திரும்பவும் எம் பெருமானிடம் வந்து சேர்ந்தது. அங்குஅப் பொழுதில் அடர்குவிசம் வான்போகிக் கங்கைப் புனல்ஆழ்ந்து,காமருபூந் தாதுஆடிச் சங்கத் தவர்க்குள் தலையாம் தமிழ்ப்புலவன் செங்கைக்குள் வந்து சிறப்புற்று இருந்துவதால். (சிங்கமுகாசுரன். 456.) [காமருபூந்தாது ஆடி -அழகிய மலர்களில் உள்ள தாதைப் பூசிக்கொண்டு.] இந்தப் பாட்டில் கச்சியப்பர் முருகப் பெருமானை, சங்கத்தவர்க் குள் தலையாம் தமிழ்ப் புலவன் " என்று சொல்கிறார். முருகப் பெருமானுக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழை மூன்று சங்கங்கள் வளர்த்தன என்று சொல்வார்கள். முதல் சங்கம் இப்போதுள்ள குமரி முனைக்குத் தெற்கில் உள்ள மதுரையில் இருந்தது. இரண்டாவது கபாடபுரத்தில் இருந்தது. மூன்றாவது சங்கம் இப்போது நளம் காணும் மதுரையில் இருந்தது.