உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்க யாக சங்க சங்காரம் தக்கன் அம்பிகையை அவமதித்தல் 613 அவளைக் கண்டவுடன், தன் மகள் வந்தாளே என்று அன்புடன் வரவேற்களில்லை தக்கன். சிவபெருமானுடய மனைவி என்றே அவளை எண்ணி மிகவும் கோபத்துடன் பேசத் தொடங்கி னான். * என்னுடைய மகளைப் போல வந்தாயே ! ஏன் வந்தாய்? தந்தை இன்னார் என்று தெரியாமல், தாய் இன்னார் என்று தெரியா மல் இருக்கிற ஒருவனுடைய மனைவி நீ. நான் யாகம் செய்யும்போது எதற்காக வந்தாய்? நீ வரவேண்டுமென்று நான் உனக்கு அழைப்பு அனுப்பவில்லையே ! அழையாத இடத்தில் நுழையலாமா? 5 போ இங்கிருந்து " என்று கோபத்துடன் பேசினான். தந்தை தன்னொடும் தாய்இ லாதவன் சிந்தை அன்புறும் தேவி ஆனநீ இந்த வேள்வியான் இயற்றும் வேளையில் வந்தது என்கொலோ, மகளிர் போலவே. மல்லல் சேரும்இம் மாம கந்தனக்கு ஒல்லை வாஎன உரைத்து விட்டதும் இல்லை; ஈண்டுநீ ஏக லாகுமோ? செல்லு, மீண்டுதின் சிலம்பில் என்னவே. (மகளிர்-புத்திரிகன். நூகலாய மலைக்கு.] (உமைவரு.29,30.1 மல்லல் - வளம்,பெருமை. மகம் -பாகம். சிலம்பில் - இதைக் கேட்ட தாட்சாயணிக்குக் கோபம் வரவில்லை. "உன்னுடைய பெண்களாகப் பிறந்த என்னுடைய தங்கைமார் களுக்கும், மாப்பிள்ளைகளுக்கும் தக்க சீரை எல்லாம் செய்திருக்கி றாயே! அவர்களோடு உறவு பூண்டிருக்கிறாயே ! எங்களை மாத்திரம் எண்ணாமல் இருக்கலாமா? நான் உன் மகள் அல்லவா?" என்று தக்கனிடம் சொன்னாள். 65 மங்கை கூறுவாள்: மருகர் யார்க்கும்என் தங்கை மார்க்கும்நீ தக்க தக்கசீர் உங்கு நல்கியே உறவு செய்துளாய்; எங்கள் தம்மைஓர் இறையும் எண்ணலாய். (உமைவரு.31.) (மருகர்- மாப்பிள்ளைமார்.உங்கு - இங்கே. இறையும் - சிறிதளவும்.)