514 கந்தவேள் கதையமுதம் "உன் கணவன் அகங்காரம் பிடித்தவன். நீயும் அவனோடு சேர்ந்து அகங்காரம் கொண்டிருக்கிறாய். தலைக்கனம் கொண்டிருக்கிற உங்களை நான் அழைக்கவில்லை. உன் தங்கைமார்களுடைய கணவர் கள் எனக்கு வேண்டியவர்கள் : உன்னைவிட எனக்கு இனியவர்கள். அதனால்தான் அவர்கள் எல்லோரையும் அழைத்தேன். அவர்களுக்கு மரியாதை செய்கிறேன் ; சிறப்புச் செய்கிறேன். உலகத்தை எல்லாம் தம் வயிற்றில் அடக்கிய திருமாலும், அவருடைய புதல்வராகிய பிரமனும் மற்றத் தேவர்களும் இங்கே வந்து என்னைத் துதி பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவபெருமானும் நீயும் சிறிதளவு கூட என்னை மதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது எனக்கு எப்படி உங்களிடம் அன்பு உண்டாகும்? உங்களிடத்தில் எனக்குச் சிறிதளவும் மகிழ்ச்சி கிடையாது" என்று பேசினான். புவனம் உண்டபால் புதல்வன் ஆதியாம் எவரும் வந்துஎனை ஏத்து சின்றளர்; சிவனும் நீயும்ஓர் சிறிதும் எண்ணவிர்; உவகை இன்றுஎனக்கு உங்கள் பாங்கரில். (உணமவரு.38.1 [புதல்வன் - பிரமன். உவகை இன்று - மகிழ்ச்சி இல்லை. உங்கள் பாங்கரில் உங்களிடத்தில்.] அதைக் கேட்ட தாட்சாயணிக்குக் கோபம் வந்தது. "என்னை நீ இகழ்ந்ததற்காக நான் கவலைப்படவில்லை. என்னுடைய நாயகரா கிய சிவபெருமானை நீ இகழ்ந்து பேசினாய். அதை நான் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அவர் உலகத்திற்கு எல்லாம் தெய்வம். எனக்கும் அவரே தெய்வம். அவரை இழித்துப் பேசினதை நான் சிறிதும் சகிக்க முடியாது. என்னுடைய காதிலே நஞ்சை வார்த்தது போல இருந்தது உன்னுடைய பேச்சு" என்றாள். என்னை நீஇவண் இகழ்ந்த தன்மையை உன்ன லேன் ; எனை உடைய நாயகன் தன்னை எள்ளினாய் ; தரிக்கி லேன்; அதுஎன் கன்ன மூடுசெல் கடுரை போலுமால். (உமைவரு.46.) (என்னினாய் இகழ்ந்தாய், தரிக்கிலேன் - பொறுக்கவில்லை. கன்னமுடு - காதில் கடுவு-நஞ்சு) அப்போது தக்கன், "அழிக்கும் வேலையைச் செய்கிறவன் சிவபெருமான்' என்று இகழ்ந்தான். உண்மை தெரியாமல்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/534
Appearance