உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்க யாக சங்காரம் 515 இப்படிப் பேசுகின்றாய்" எனத் தன் தந்தையைப் பார்த்து அம்பிகை உண்மையை உரைத்தாள்; எம்பெருமான் சங்காரம் செய்கிறார் என்கிறாயே ; அது தீயது அல்ல. அவர் அருளால் உயிர்க் கூட்டங்கள் இறந்தும், பிறந்தும் உய்வு இல்லாமல் உழலுகின்றன. மகாசங்கார காலத்தில் அவ்வாறு திரியாமல் எல்லா உயிர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அடக்கி அவர்களுக்கு உய்வு கொடுக் கிறார். ஆகையால் அது ஒரு வகையான அருள்" என்று சொன்னாள். மிகவும் அல்லற்பட்ட குழந்தைகள் பல பல இடங்களுக்குப் போய் வெவ்வேறு வகையான வேலைகளைச் செய்து வருகிறார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டு வருகிறார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன், சாப்பாடு போட்டு, படுக்கை விரித்து, படுக்க வைத்து அவர்களை உறங்கச் செய்கிறாள் தாய். சிறு குழந்தையைத் தாலாட்டுப் பாடி உறங்கச் செய்கிறாள். எல்லோரும் நன்றாக உறங்குவதைப் பார்த்து, 'இவ்வளவு காலம் உழைத்து வந்த குழந்தைகள் இப்போதுதான் ஓய்வாகப் படுத்திருக் கிறார்கள்' என்று சந்தோஷப்படுகிறாள். அதுபோல மகாசங்கார காலத்தில் ஆண்டவன் உயிர்க்கூட்டங்களை எல்லாம் தன்னகத்தே ஒடுக்கிக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறான். இந்தக் காரியத்தை அம்பிகை தக்கனுக்கு எடுத்துரைத்தாள். தீய தன்றுஅடும் செயலும்; நல்லருள்; ஆயின் ஆவிகள் அழிந்தும் தோன்றியும் ஓய்வி லாதுஉழன்று உலைவு குமலே மாய்வு செய்துஇறை வருத்தம் ஆற்றலால். (உமைவரு.48.) அடும் செயல் - சங்காரம் செய்தல். உலைவுறாமல் - வருந்தாமல், இறை - இறை வன். ஆற்றலால் நல்லகுள் என்று கூட்டுக.) அவள் இதை எல்லாம் எடுத்துச் சொல்லி, "உனக்கு உரிய தண்டனை நிச்சயமாகக் கிடைக்கும்" என்று கூறி அங்கிருந்து புறப் பட்டுவிட்டாள். நேரே இறைவனிடம் வந்து தான் சென்றதையும், பிறவற்றையும் உரைத்து அந்த யாகத்தைச் சிதைத்தருள வேண்டு மென்று கேட்டுக்கொண்டாள். வீரபத்திரனும் காளியும் தோற்றுதல் அப்போது சிவபெருமான் தன் திருவுள்ளத்தில் நினைத்தபோது அவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரன் வந்து தோன்றி