516 கந்தவேள் கதையமுதம் னான். அவன் திருமேனி செக்கச் செவேல் என்று சிவனைப்போல இருந்தது. சிவபெருமான் திருமேனி அப்படித்தான் இருக்கும். அவன் சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணிலிருந்து எம்பெரு மானது வடிவத்தை எடுத்துக்கொண்டு தோன்றி முன்னாலே வந்து நின்றான். அந்தி வான்பொரு மேனியன், கறைமிடறு அணிந்த எந்தை தன்வடி வாய்அவன் நுதல்விழி யிடையே வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ முந்து வீரபத் திரனெனும் திறலுடை முதல்வன். (வீரபத்திரம்.14.) வீரபத்திரன் என்பதற்கு வீரத்தினால் மங்கலத்தை உண்டாக்கு கிறவன் என்று பொருள். அப்போது அங்கே இருந்த உமாதேவி யார் கோபம் கொண்டு பத்திரகாளியை உண்டாக்கினாள். இரண்டா யிரம் கைகளுடன் சிவந்த முகத்தை உடையவளாகக் காளி தோன்றி னாள். நின்றாள். அந்தக் காளி வீரபத்திரனை அணுகி அவனோடு சேர்ந்து வீரபத்திரன் சிவபெருமானிடம், "நான் செய்ய வேண்டிய பணி யாது?" என்று கேட்டான். "தக்கனிடம் சென்று எனக்குரிய அவிர்பாகத்தை வாங்கி வா. அவன் தர மறுத்தால் அவன் தலையைத் தடிந்து,அங்குள்ளவர்களை அழித்துவிடு. நாம் வருவோம். இப்போதே அங்கே போ" என்று சிவபெருமான் உத்தரவிட்டான். என்ற வீரனை நோக்கியே கண்ணுதல், எம்மை அன்றி வேள்விசெய் கின்றனன் தக்கன் ; அவ் விடைநீ சென்று மற்றுஎமது அளியினைக் கேட்டி ; அத் தீயோன் நன்று தந்தன னேஎனின் இவ்விடை நடத்தி. தருதல் இன்றெனின் அன்னவன் தலையினைத் தடிந்து பரிவி னால்அவுன் பால்உறுவோரையும் படுத்துப் புரியும் எச்சமும் கலக்குதி ; அங்கது பொழுதின் வருதும் ஆயிடை ; ஏகுதி என்றனன் வள்ளல். (வீரபத்திரப்.20,21.) (கண்ணுதல் - சிவபெருமான். அவ்விடை - அவ்விடத்தில், இவ்விடை - இவ்விடத் தடிந்து - வெட்டி. பரிவினால் அன்போடு. படுத்து அழித்து. எச்சம் - யக்கும்: வேள்வி.வருதும் - வருடுவாம்.] திற்கு. வீரபத்திரன் வேள்விச் சாலையை அடைதல் வீரபத்திரன் பல பல வீரர்களை உண்டாக்கி அந்த வீரர் கூட்டத்தோடு தக்கன் யாகம் செய்யும் இடத்தை அணுகினான்,
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/536
Appearance