உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்க யாக சங்காரம் 517 பத்திரகாளியும் தன்னைப் போலவே பல காளிகளை உண்டாக்கி அந்தப் பெரும்படையுடன் சென்றாள். 01 யாகசாலையை அடைந்த வீரபத்திரன் படைத் தலைவர்களை எல்லாம் வாயிலில் நிறுத்தினான்; யாரும் வெளியில் போகாமல் காவல் செய்யுங்கள்" என்று பணித்தான். பற்றலர் புரம்மூன்று ஆட்ட பரமனை இகழ்ந்து நீக்கிச் சிற்றினம் பொருள்என்று உன்னிச் சிறுவிதி என்னும் தீயோன் இற்றிடும் தெறியால் வேள்வி இயற்றும்இச் சாலை வாயில் சுற்றொடு சேமம் செய்து துயக்கறக் காத்திர் என்றன். [பற்றலர் - பகைவர். அழிவதற்குரிய வழியில் இன்றி.] சிறுவிதி - தட்சப் பிரசாபதி. (வீரபத்திரம்.52.) இற்றிடும் நெறியால்- சோம் செய்து -காவல் புரிந்து. அயக்கு அற - வருத்தம் "எல்லோருக்கும் பெரியவனுகிய ஆண்டவனை விட்டுவிட்டுச் சிற்றி னம் ஆகிய தேவர்களை வைத்துக்கொண்டு அந்தப் பலத்தினால் வேள்வியைச் செய்யலாம் என்று இவன் நினைக்கிறானே !" என்று வீரபத்திரன் சொன்னான். இவ்வாறு வீரபத்திரன் பூதகணங்களுடன் வேள்விச் சாலையை முற்றுகையிட்டபோது, அந்தப் பூத கணங்களைத் தேவர்கள் பார்த் தார்கள். எங்கே பார்த்தாலும் கணங்கள் மயமாக இருந்ததைப் பார்த்து அஞ்சினார்கள். வெளியில் போக முடியாதே என்ற பயம் உண்டாயிற்று. எதற்காக இவர்கள் வந்தார்கள் என்று எண்ணி னார்கள். 'நாம் எல்லாம் ஓடி ஒளிவதற்குரிய இடம் கூட இல்லையே! இன்றோடு நம் வாழ்வே போய்விடும் போலிருக்கிறதே! இது யார் செய்த காரியம்?' என்று தேவர்கள் தங்கள் தங்களுக்குள் பேசிப் பயம் அடைந்து நின்றார்கள். சுற்றிச் சூழக் காட்டிலே தீ எரிந்து கனிந்து கொண்டிருக்கிறபோது நடுவில் யானைக் கூட்டம் இருந்தால் எப்படி இருக்குமோ, அது போலத் தேவர்கள் இருந்தார்கள்