தக்க யாக சங்காரம் 521 திருமாலை, பங்கய விழியினான்' என்கிறார் ஆசிரியர். திருமாலுக்கு ஆயுதமாக இருப்பது சக்கரம். அந்தச் சக்கராயுதத் தைச் சிவபெருமானிடம் இருந்துதான் திருமால் பெற்றார். ஒரு சமயம் ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களால் சிவபெருமானை அவர் அருச்சித்தார். ஒரு மலர் இல்லாமல் போக, தம் விழியையே பங்கய மாகக் கொண்டு பறித்து அருச்சனை பண்ணினார். சிவபெருமான் மகிழ்ந்து அவருக்குச் சக்கராயுதத்தை வழங்கினான். அவ்வளவு அருமையாக, சிவனைத் தம் தாமரை போன்ற கண்ணையே பறித்து அருச்சனை செய்து சக்கராயுதத்தைப் பெற்றவருக்குக் கூட இப்போது உண்மை தெரியவில்லை. 'சிவனை நினைக்காத வேள்வியில் நாம் எல்லாம்.கலந்து கொண்டாமே!" என்று தோன்றவில்லை. பெரிய வர்களுக்குக் கூடச் சில சமயம் அறிவு மயக்கம் உண்டாகும் என்பதை இது காட்டுகிறது. அந்தச் சக்கராயுதத்தை எடுத்து வீரபத்திரன் விழுங்கி விட்டான். திருமால் தம் கையிலுள்ள கதாயுதத்தை எறிய, அதை வீரன் தன் கையிலுள்ள கத்தியினால் தடுத்தான். திருமால் ஓச்சு வதற்குத் தம் கை வாளை உருவினார். வீரபத்திரன் உங்காரம் செய்தான். திருமால் மயங்கிக் கையும் வாளுமாய் நின்றார். அந்தச் சமயத்தில் அசரீரியாக இறைவன் ஒன்று சொன்னான். அப்பா, நீ கோபப்படாதே. உன் கோபம் போகட்டும்" என்று குரல் கொடுத்தான். கண்ணுதலானாகிய பரமேசுவரனே, அசரீரியாக அந்த வார்த்தையைச் சொன்னான். அதைக் கேட்ட வீரபத்திரன் சினம் ஆறினான். அப்போது திருமாலும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தோத்திரம் செய்ய ஆரம்பித்தார். "என்னுடைய பெரிய வில்லையும் அழித்து, வேறு வகையான ஆயுதங்களையும் செயல்படாமல் செய்து, பகைவர்களுடைய உயிர்களை எல்லாம் உண்டு வீரம் காட்டிய சக்கராயுதத்தையும் விழுங்கி, இந்த யுத்தத்தில் என்னை வென்றாயே ; நீ மிக்க புகழைப் பெற்றிருக்கிறாய். உன் தகைமையை யார் சொல்ல முடியும் ? யார் தெரிந்துகொள்ள முடியும் ?"
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/547
Appearance