உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 கந்தவேள் கதையமுதம் பாரவெஞ் சிலையும் வீட்டிப் பல்படைக் கலனும் சிந்திச் சோலர் உயிர்கள் உண்ட திகிரியும் செல்ல துங்கிப் போரிடை எனையும் வென்று புகழ்புனைந் திடுதி என்றால் வீரநின் தகைமை, யாரே முடிவுற விளம்ப வல்லார்? யாகசங்காரப். 129.} . [பார வெஞ்சிலை கனமான கொடிய வில். வீட்டி -அழித்து-சேரலர் -பலகவர் திகிரி - சக்கரம். நுங்கி - விழுங்கி ] "பிரமனுடைய மகனாகிய தக்கன் செய்த வேள்வியில் பூஜைபெற வேண்டுமென்று எண்ணி இங்கே வந்தேன். அப்போதே நான் சிறிதும் யோசிக்கவில்லை. அதனால் இப்போது இந்த அவமானத் தைப் பெற்றேன். இது வருந்துவதற்குரியது. ஈசனை இகழ்ந்தவர் களோடு இருப்பது தவறு என்பது இப்போது தெரிந்துவிட்டது" என்று சொன்னார். ஆசறு நெறியின் நீங்கும் அயன்மகன் இயற்று கின்ற பூசனை விரும்பி, வேள்வி புகுந்தனன்; புந்தி யில்லேன்; மாசறு புகழாய், நின்னால் மற்றிது பெற்றேன் ; அந்தோ! ஈசனை இகழ்ந்தோர் தம்பால் இருப்பரோ எண்ணம் மிக்கோர் {யாலசங்காரம். 130.) (ஆசறு நெறியின் நீங்கும் அயன்மகள் - குற்றயில்லாத வழியினின்றும் விலகிய ரேமபுத்திரனாகிய தக்கன். மற்று: குசை. இது - இந்தத் தண்டனை.) சிற்றினம் சேராமை நாம் நல்லவர்களாக இருந்தாலும் பொல்லாதவர்களோடு சேரக் கூடாது. சிற்றினம் சேர்ந்தவர்கள் எளிதில் தவறு செய்யப் பழகுவார்கள். நல்ல மாம்பழங்கள் பத்து இருந்தாலும், அவற்றில் ஏதேனும் ஒரு பழம் அழுகிவிட்டால் எல்லாப் பழங்களும் பாழாகி விடும். ஆகையால் பெரியவர்கள் எப்போதும் நல்ல இனத்தோடு இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அபிராமிபட்டர் என்ற தேவி உபாசகர் நல்ல இனம் வேண்டுமென்பதை வற்புறுத்து கிறார். அதைச் சொல்லும்போது, "பொல்லாக இனத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்கினேன்" என்று அவர் சொல்கிறார். $4 அறிந்தேன் எவரும் அறியா மறையை; அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக் கோதிரு வேவெருவிப் மீறிந்தேன்நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழும்நர குக்குற வாய் மனிதரையே.