உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்க யாக சங்காரம் க 529 இங்கே, "வெருவிப் பிரிந்தேன் " என்று சொல்கிறார். புலியைக் கண்டால் எப்படிப் பயந்து மக்கள் ஓடுவார்களோ, அப்படிப் பொல் வாதவர்களைக் கண்டால் ஓடிவிட வேண்டும் ஆயிரம் பேர் இருக்கிற கூட்டத்தில் ஒருவன் தனியாக நிற்க முடியாது. அவர்கள் போகிற போக்கில்தான் போவான். ஆகவே, நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், நல்ல பழக்கங்களை மேற் கொண்டாலும் பொல்லாதவர்கனோடு சேர்ந்தால் ஒரு கணத்தில் மாறிவிடுவோம். விளக்கை ஏற்றிய பிறகு அதைச் சுற்றிச் சூழப் பாதுகாப்பு வைத்தால்தான் வெளிக் காற்றினால் அணையாமல் இருக் கும். அப்படி நல்ல இனத்தோடு இருந்தால்தான் நல்ல குணங்கள் நிலைபெறும். பொல்லாசு இனத்தோடு சேரக் கூடாது. திருமால் அறிவு உடையவர். பொல்லாத இனத்தோடு சேர்ந்த தால்தான் இந்தத் துன்பத்தை அடைந்தார். ஆகவேதான், ஈசனை இகழ்ந்தோர் தம்பால் இருப்பரோ எண்ணம் மிக்கோர் என்று வீரபத்திரனிடம் சொன்னார். சிவபெருமான் தோன்றி அருள்புரிதல் அப்போது சிவபெருமான் அங்கே தோன்றினான்.எம்பெரு மாட்டியும் உடன் வந்தாள். தக்கனுடைய யாகத்தை அழிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட அந்தப் பெருமாட்டி, இப்போது எல்லோரும் அங்கே அழிந்திருப்பதைக் கண்டு மிகவும் இரக்கம் அடைந்தாள். தாயின் இயற்கையே அத்தகையதுதான். கோபத்தி னாலே தன் குழந்தையை அடித்துவிடுவாள். பின்பு, "நான் பாவி, அடித்துவிட்டேனே !" என்று இரங்குவாள். அதேபோல் தாட்சா யணி, தன் தகப்பனாகிய தக்கன் வேள்விக்குப் போய் வந்தவுடன் இறைவனிடம், "நீங்கள் அந்த யாகத்தை அழிக்க வேண்டும்" என்று முதலில் வேண்டிக்கொண்டாள். இப்போது தேவர்களும் பிறரும் தண்டனை பெற்றதைக் கண்டு மனம் இரங்கினாள். உடனே இறைவனைப் பார்த்து வேண்டினாள்; "நான் முன்பு இவர்களை எல்லாம் அழிக்க வேண்டுமென்று விரும்பியவுடன், அடியேனுடைய விருப்பத்தை நிறைவேற்ற வீரபத்திரனை அனுப்பி அப்படியே செய்தீர்கள். இப்போது இவர்கள் எல்லாம் உயிர்பெற்று எழும் 67