530 கந்தவேள் கதையமுதம் வண்ணம் கிருபை செய்ய வேண்டும். இந்த வரத்தை எனக்கு அருள வேண்டும்" என்று பிரார்த்தித்தாள் அம்பிகை. மூந்தும் இவரை முடித்தியென வெஃகியதும் தத்து முடிந்தாய், தனிவீர னால் ; அகையர் உய்ந்து குறைபோய் உயிர்பெற் றெழும்வண்ணம் இந்த வாமும் எனக்கருளாய் எம்கோவே. (முடித்தி என வெஃகியதும் - அழிப்பாயாக போய் - குற்றம் நீங்கி.) (யாகசங்காரம். 1:42.) என்று விரும்பியவுடன். குறை தேவர் எழுதல் உடனே சிவபெருமான் வீரபத்திரனைப் பார்த்து, "இவர்களை எல்லாம் எழுப்புவாயாக!" என, அவன் யாவரையும் எழுப்பினான். உயிர்பெற்று எழுந்தவர்கள் எல்லாம் சிவபெருமானைப் பணிந்து, "உங்கள் திருவடிக்கு நாங்கள் பெரிய அபராதத்தைச் செய்து விட்டோம். வீரபத்திரன் என்னும் சிங்கத்தின் கையால் நாங்கள் அழிந்து ஒழிந்தோம். ஆனால் அப்படிக் கிடைத்தது எங்களுக்குத் தண்டனை என்று சொல்லக் கூடாது. அதனால் நாங்கள் இப்போது தூயவர்கள் ஆகிவிட்டோம். எங்களுக்கு அங்கஹீனம் வந்தது என்று நினைக்கவில்லை. அங்கங்களுக்கு எல்லாம் ஆபரணம் கிடைத்தது போன்ற நிலை வந்தது என்று நினைக்கிறோம். இப்போது அறிவுத் தெளிவு பெற்றிருக்கிறோம்” என்று எல்லோரும் சொன்னார்கள். இங்குஉன் அடிபிழைத்தோம் எல்லோமும் வீரன்எனும் சிங்கம்தன் கையால் சிதைபட்ட வாறுஎல்லாம் பங்கங்கள் அன்றே ; பவித்திரமாய் மற்றெங்கள் அங்கங்கட் கெல்லாம் அணித்த அணியன்றோ? [பங்கங்கள் - குறைபாடுகள். சிதைவடைந்த (யாகசம்காரப். 154.) பனித்திரமாய் சுத்தமடைந்து, சிதைபட்ட தக்கன் ஆட்டுத் தலை பெறுதல் எல்லோரும் அங்கே இருந்தார்கள். தக்கனை மாத்திரம் காண வில்லை. அம்பிகை, அவனைக் காணவில்லையே என்று கேட்டாள். அப்போது வீரபத்திரன் பானுகம்பனைத் தக்கனுடைய குறையுடலைக் கொண்டுவரும்படி ஏவினான். வேள்விக்கு அவிசாகிய ஆட்டின்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/550
Appearance