பிறந்திடவில்லை. செல்லுமிடம் எதுவென்ற தெளிவின்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தான். கரும்பையும் கண்டான்; கசப்பையும் கண்டான். ஆடிப்பாடிடவும் செய்தான் ஆயாசமடைந்திடவும் செய்தான்.
கண்ணாயிரம் தனக்கென ஒரு உலகினை உருவாக்கிக்கொள்ளவில்லை: தந்தை உருவாக்கி வைத்திருந்த உலகில், 'சுகபோக உலகில்' இடம் பெற்றான்; ஆனால் அதிலே இருந்துகொண்டே அவன் வேறு உலகம் பற்றிய நாட்டம் கொண்டிடலானான். இக்கட்டான நிலை என்பது மட்டுமல்ல, கண்ணாயிரம் 'இரு உலக வாசியானான்'. அதுபற்றிய விளக்கக் கதையே நாடக வடிவில் தரப்படுகிறது.
கண்ணாயிரம் இருவேறு உலகில் உந்தப்பட்டும் உறைவிடம் பெற்றும் அலைந்தது மட்டுமே, இங்கு காணக் கிடைக்கும். கடைசியாக அவன் எந்த உலகுக்குத் தன்னை உரியவனாக்கிக் கொண்டான் என்பது கூறப்படவில்லை.
கண்ணாயிரத்தின் உலகம், ஒரு திட்டவட்டமான நடவடிக்கையை மேற்கொள்ளத்தக்க இயல்பினைப் பெற்றிடத் துணை செய்யவில்லை என்பதும், இதிலிருந்து பெறத்தக்க பாடங்களில் ஒன்று என்று கூறலாம்.
கரத்தில் சிக்கிய யாழின் நரம்புகளை, இசைமுறையும் பயிற்சியும் பெறாதவன், தடவிடும்போது, இன்னொலியும் கிடைத்திடும். வெற்றொலியும் எழும்பிடும், வேதனை தரத்தக்க ஒலியும் பிறந்திடுமல்லவா
கண்ணாயிரத்தின் உலகிலே அதுபோலத்தான்.
இனி, கண்ணாயிரத்தின் உலகினைக் காணச் செல்வோம்.
317