உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

159

ராதா விதவையானாள். குங்குமம் இழந்தாள். கூடின பந்துக்கள் தமது அனுதாபத்தை தெரிவித்தனர். வேதவல்லி தன்னைப் போலவே ராதாவும் ஆனது கண்டாள்; மனம் நொந்தாள்.

ராதா விதவையானாள்; பரந்தாமன் குருடனானான். அம்மையிலிருந்து அவன் தப்பித்துக் கொண்டான். ஆனால் அவனது கண்கள் தப்பவில்லை. பார்வையை இழந்தான், பரந்தாமன். ராதாவுக்கு நேரிட்ட விபத்தைக் கேட்டான். மனம் நொந்தான். ஏன்? ராதாவுக்கு இதனால் மனக்கஷ்டம் வருமே என்பதனால். அம்மை போயிற்றே தவிர, எழுந்து நடமாடும் பலம் பரந்தாமனுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் பிடித்தது.

ஒரு மாதத்துக்குப் பிறகு பரந்தாமன் ராதாவைக் காணச் சென்றான். கண் இழந்தவன் கபோதி. எனினும் அவளைக் காணமுடியும் அவனால். கண் இழந்தான்; கருத்தை இழக்கவில்லையல்லவா!

ராதா, தாலியை இழந்தாள்; பிறரால் பிணைக்கப்பட்ட கணவனை இழந்தாள்; தன் வாழ்க்கையில் அதனை ஒரு விபத்து எனக் கொண்டாள். ஆனால், அதனாலேயே தன் வாழ்க்கையில் இருந்து வந்த இன்ப ஊற்று உலர்ந்து விட்டதாகக் கருத முடியவில்லை.

துக்கம் விசாரிக்க வந்தவர்களெல்லாம், தனக்கும் மாண்டுபோன தன் கணவருக்கும் இருந்த பொருத்தம், ஒற்றுமை, நேசம் முதலியவைகளைப் பற்றிப் பேசினர். அது வாடிக்கையான பேச்சுத்தானே! யாருக்குத் தெரியும் – தன் காதலனைக் காணப்போகவேண்டும் என்பதற்காகக் கணவனுக்கு அபின் ஊட்ட, அது அளவுக்கு மீறிப் போனதால், அவன் இறந்தால் என்ற உண்மை.

தன் கணவனைத் தானே கொன்றதை எண்ணும்போது ராதாவுக்கு இருதயத்தில் ஈட்டி பாய்வது போலத்தான் இருந்தது. “நான் அவர் சற்று தூங்கவேண்டும் என்று அபின்